Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிரை அரெஸ்ட் பண்ணிட்டு போனதால் வீட்டில் இருப்பவர்கள் ரொம்பவே சோகமாக இருக்கிறார்கள். அவர்களிடம் கதிரை எப்படியாவது கூட்டிட்டு வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லி பாண்டியன், போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார். ஆனால் அங்கே போலீஸ் உடன் சேர்ந்து சக்திவேல் செய்த அலப்பறையால் கதிரை கூட்டிட்டு வர முடியவில்லை.
இருந்தாலும் கதிர் சொன்னபடி நான் அந்த பெண்ணை கண்டுபிடித்து கூட்டிட்டு வருகிறேன் என்று செந்தில் சரவணனை கூட்டிட்டு போய்விட்டார். பிறகு பழனிச்சாமி மற்றும் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். இவர்களை பார்த்ததும் கதிர் வந்துவிட்டார் என்று கோமதி வாசலில் போய் பார்க்கிறார். அப்படி கதிர் வரவில்லை என்று தெரிந்த நிலையில் கோமதி வீட்டுக்கு வரும்போது நான் கதிரை கூட்டிட்டு தான் வருவேன் என்று சொன்னீங்க. இப்ப என் பையனை எங்கே என்று கேட்டு அழுது புலம்புகிறார்.
பிறகு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விஷயத்தையும் சக்திவேல் வந்து சொன்னதையும் சொல்லி ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை பழனிசாமி சொல்கிறார். உடனே கோமதி,சக்திவேல் மீது கோபப்பட்டு கதிரை நினைத்து பீல் பண்ணி அழுகிறார். அடுத்ததாக செந்தில் மற்றும் சரவணன் அந்தப் பெண்ணை விட்ட இடத்திற்கு சென்று தேடிப் பார்க்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ஜெயிலுக்குள் இருக்கும் கதிர் அடித்த அடியை தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருக்கிறார். பாண்டியன் வீட்டில் கதிரை நினைத்து பீல் பண்ணுகிறார். பிறகு மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு ராஜி, பாண்டியன் மற்றும் பழனிச்சாமி அனைவரும் வருகிறார்கள். வந்ததும் போலீஸ் இடம் ராஜி என்னை யாரும் கடத்தவில்லை. நானாக விரும்பி வீட்டை விட்டு போய் கல்யாணம் பண்ணினேன் என்று சொல்லி கதிர் மீது தப்பு இல்லை என்று வாதாடுகிறார்.
ஆனால் போலீஸ் எதையும் காது கொடுத்து கேட்காமல் கதிர் குற்றவாளி என்று முடிவு பண்ணி அதற்கு ஏற்ற மாதிரியே பேசுகிறார். அந்த சமயத்தில் செந்தில் மற்றும் சரவணன், நாங்க அந்த பெண்ணை கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி அந்த பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள். பிறகு நடந்த விஷயத்தை அந்த பெண்ணும், செந்தில் மற்றும் சரவணன் அனைவரும் சேர்ந்து சொல்கிறார்கள்.
அதன்பின் தான் அந்த பெண்ணுடைய அப்பாவுக்கும் போலீசுக்கும் புரிந்தது கதிர் மீது எந்த தவறும் இல்லை என்று. உடனே கதிர் அடி வாங்கி காயத்துடன் இருப்பதை பார்த்து பாண்டியன் பாசத்தில் அரவணைத்துக் கொண்டார். பாண்டியன் போலீஸிடம் ஒரு பெண்ணை காணும் என்றால் இரண்டு பக்கமும் விசாரித்து, அந்த பெண்ணை தேடும் முயற்சியில் நீங்கள் இறங்கி இருக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் அதை செய்யாமல் என் மகன் தான் குற்றவாளி என்று முடிவு பண்ணி அவனை போட்டு அடித்து இப்படி துன்புறுத்தி விட்டீங்க. நீங்க கண்டுபிடிக்க வேண்டிய விஷயத்தை என்னுடைய பசங்க கண்டுபிடிச்சிருக்காங்க. இனியாவது உங்க வேலைய ஒழுங்கா பாருங்க என்று சொல்லி கதிரை கூட்டிட்டு வீட்டுக்கு போய் விடுகிறார்கள். அங்கே கதிரை பார்த்ததும் கோமதி அழுது ஃபீல் பண்ணுகிறார்.
இன்னொரு பக்கம் ராஜி, கதிரிடம் காதலையும் சொல்ல முடியாமல் அன்பாக அரவணைத்தும் பேச முடியாமல் உருகி தவிக்கிறார். அடுத்ததாக தங்கமயில் கதிருக்கு ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிட்டு போக ஆரத்தி தட்டுடன் வருகிறார். இதையெல்லாம் எதிர்த்து வீட்டில் இருக்கும் சக்திவேல் மற்றும் குமரவேலு பார்த்து இன்னும் கொஞ்ச நாளைக்கு உள்ளே இருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும்.
அதற்குள் வீட்டிற்கு கூட்டு வந்து விட்டார்களே என்று பொறாமையில் பேசிக்கொள்கிறார்கள். உடனே பாண்டியன் கதிரின் கையைப் பிடித்து இழுத்து சக்திவேல் இடம் கூட்டு போகிறார். என் மகனைப் பற்றி என்னெல்லாம் பேசினீங்க, இப்போ அவன் மீது எந்த தவறும் இல்லை என்று வெளியே விட்டு விட்டார்கள். இப்போ உங்க மூஞ்சிய எங்க கொண்டு போய் வைக்க போறீங்க என்று சொல்லி சக்திவேல் மூஞ்சில் கரியை பூசி விட்டார்.