வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

பாண்டியனை குறை சொல்லிய செந்தில், ருத்ரதாண்டவம் ஆடிய கோமதி.. கண்ணீருடன் நிற்கும் மூன்று மருமகள்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் வேலைக்கு போகக்கூடாது என்று பாண்டியன் மற்றும் கோமதி தடுத்து பார்த்தார்கள். ஆனால் கதிர் பிடிவாதமாக வேலைக்கு போனதால் செந்தில் இடம் நீயாவது அவனிடம் சொல்லக்கூடாதா என்று பாண்டியன் கேட்கிறார். அதற்கு செந்தில், வேலைக்கு போறது அவனுடைய இஷ்டம் இதில் நான் சொல்றதுக்கு என்ன இருக்கிறது.

அவன் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று வேலைக்கு போகிறான். யாரையும் நம்பாமல் சொந்தக்காலில் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதால் கதிர் வேலைக்கு போக முடிவு பண்ணிட்டான். இதை என்னால் எப்படி தடுக்க முடியும் என்று சொல்லிய நிலையில் கோமதி, நீ ஏன் அப்பாவிடம் அப்படி பேசினாய் என்று கேட்கிறார். அதற்கு செந்தில், நான் தப்பாக சொல்லலை. அப்பாவையும் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம். அதை தான் நான் சொன்னேன் என்று சொல்கிறார். உடனே கோமதி உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற திமிரில் பேசுகிறாயா என்று கேட்கிறார். அதற்கு செந்தில், கல்யாணம் ஆன பிறகு தான் சில விஷயங்கள் புரிகிறது. என் மனைவிக்கு கொஞ்சம் பூ ஒரு புடவை வாங்கிக் கொடுக்கணும் என்று ஆசைப்பட்டாலும் அதை என்னால் வாங்கி கொடுக்க முடியவில்லை.

அதற்கு அப்பாவிடம் தான் பணம் கேட்கணும், சரி இதில் கௌரவத்தை பார்க்காமல் அப்பாவிடம் கேட்டாலும் அதற்கு ஏன் எதற்கு இப்பொழுது என்று ஆயிரம் கேள்வி கேட்டு பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்று பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார். கடைசியில் ஏதோ போனா போகுது என்று 300 ரூபாய் கையில கொடுப்பார். அதை வைத்து என்னால் என்னதான் பண்ண முடியும்.

இப்படி சொல்ல முடியாத நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று பல விஷயங்களை செந்தில் மனதில் இருக்கும் வேதனைகள் எல்லாம் கொட்டும் வகையில் பேசி விட்டார். ஆனால் இதைக் கேட்ட கோமதி, பாண்டியனை குற்றம் சாட்ட்டி பேசிவிட்டார் என்று கோவம் அடைந்து விட்டார். அந்த கோபத்தை மீனாவிடம் காட்டும் விதமாக நீ தான் என் பையனை தூண்டி விட்டு அப்பாவுக்கு எதிராக பேச சொன்னியா என்று வாய்க்கு வந்தபடி வார்த்தையால் பேசி மீனாவை காயப்படுத்தி விட்டார்.

இதை பார்த்த தங்கமயில், மீனா பாவம் ஏன் அத்தை அப்படியெல்லாம் பேசுறீங்க என்று வக்காலத்து வாங்கினார். உடனே கோமதி, தங்கமயிலையும் பார்த்து நீயும் உன் புருஷனை அவங்க அப்பாவுக்கு எதிராக திருப்ப போறியா என்று கோவமாக பேசிவிட்டார். பிறகு ராஜியையும் நீ வந்த பிறகுதான் கதிர் வேலை வேலை என்று போய்க்கொண்டே இருக்கிறான்.

ஆக மொத்தத்தில் என் வீட்டில் மூன்று மருமகள் வந்த பிறகுதான் என் குடும்பத்தில் பிரச்சினைகளை வர ஆரம்பித்தது என்று கோமதி ஆவேசமாக பொங்கி விட்டார். கடைசியில் மூன்று மருமகளும் அடுப்பாங்கரையில் வேதனைப்பட்டு கண்ணீருடன் நிற்கும்படி கோமதி ருத்ரம் தாண்டவம் ஆகிவிட்டார்.

Trending News