புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியனின் ஆணவத்திற்கு முடிவு கட்ட போகும் செந்தில்.. காத்திருந்த மீனாவிற்கு அடிச்ச அப்பாயின்மென்ட் ஆர்டர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டிற்கு ஏற்ற மருமகளாகவும், மாமியாருக்கு ஏத்த மருமகள், செந்திலுக்கு சரியான பொண்டாட்டி என்று மீனா அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வந்தார். அந்த வகையில் இப்படி ஒரு மருமகள் வீட்டிற்கு கிடைத்தால் எந்த பிரச்சினையும் வராது என்று யோசிக்கும் அளவிற்கு மீனாவின் கதாபாத்திரம் மக்களை கவர்ந்து விட்டது.

இன்னும் இவருடைய கதாபாத்திரம் சுவாரசியமாக அமைவதற்கு மீனாவின் கணவராக செந்தில் கதாபாத்திரத்தில் நடித்த வசந்த் வம்சிக்கு பதிலாக ஜீவா கேரக்டரில் நடித்த வெங்கட் எண்டரி கொடுத்து விட்டார். இதனை தொடர்ந்து மீனா, அப்பாவின் ஐம்பதாவது பிறந்தநாளுக்கு ஒரு கிப்ட் வாங்கி வைத்திருக்கிறார். ஆனால் அதை கொடுக்க முடியாத சூழ்நிலையில் மீனா இருப்பதால் அதனை நினைத்து ரொம்ப வருத்தப்படுகிறார்.

மாஸாக என்டரி கொடுத்த செந்தில்

ஏனென்றால் கோவிலில் பார்த்த அப்பா ஏற்கனவே மீனாவை திட்டி அனுப்பியதால் திரும்பவும் நேரடியாக பார்க்க தயக்கத்துடன் மீனா மனதுக்குள்ளே வருத்தப்பட்டு வருகிறார். இதை தெரிந்து கொண்ட செந்தில், அந்த கிப்டை எடுத்துட்டு வந்து இதை நீ ஆசையாக உங்க அப்பாவுக்காக தானே வாங்கி வைத்திருக்கிறாய். அதை போய் கொடுத்துட்டு வருவோம் என்று கூப்பிடுகிறார்.

அதற்கு மீனா வேண்டாம் தேவையில்லாமல் பிரச்சினை வரும் என்று சொல்லிய நிலையில், செந்தில் எதுனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று மீனாவை அவருடைய அப்பா வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். அங்கே போனதும் மீனா அந்த கிஃப்ட்டை கொண்டு வீட்டிற்குள் நுழைகிறார். இது என்னுடைய பர்த்டே கிப்ட் அதை கொடுத்துட்டு போகலாம் என்று தான் வந்தேன் என கொடுக்கிறார்.

அதை வாங்கியதும் மீனாவின் அப்பா இதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என்று தூக்கி எறிந்து வீட்டை விட்டு வெளியே போ என்று மீனாவை அவமானப்படுத்துகிறார். இதை நினைத்து செந்தில் இடம் அழுது கொண்டே மீனா வருகிறார். உடனே செந்தில், கதிரிடம் என்னை கல்யாணம் பண்ணின ஒரே காரணத்திற்காக மீனா எந்த காரணத்தை கொண்டு அழ கூடாது.

இனி மீனாவின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது. மீனாவின் அப்பா ஆசை அவருக்கு மருமகனாக வருபவர் கவர்மெண்ட் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று தானே. அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக நான் படித்து கவர்மெண்ட் வேலைக்கு போகிறேன் என்று கெத்தாக கதிரிடம் சொல்கிறார். இதை கேட்டதும் கதிர் அதிர்ச்சியில் ஆனந்தப்படுகிறார்.

செந்திலின் முடிவை தெரிந்து கொண்ட மீனா, சந்தோஷத்தில் செந்திலை அரவணைத்து ஆனந்தப்பட்டு கொள்கிறார். அந்த வகையில் ஏற்கனவே சரவணன் பாண்டியனிடம் வேலை பார்க்காமல் தனியாக வேலை பார்க்கிறார். அதே மாதிரி கதிரும் பாண்டியன் கடையில் வேலை பார்க்காமல் படித்துக் கொண்டு வேறு வேலையே சுய கவுரத்துடன் பார்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது செந்திலும் படித்து கவர்மெண்ட் வேலைக்கு போகிவிட்டால் பாண்டியனின் அடிமையிலிருந்து செந்தில் தப்பித்துக் கொள்வார். அத்துடன் தனியாக இருக்கும் பொழுது தான் பிள்ளைகளுடைய அருமை புரிந்து கொண்டு ஒட்டுமொத்த ஆணவத்திற்கும் அடங்கிப் போவார். கடைசியில் காத்திருந்த மீனாவிற்கு ஒரு ஜாக்பாட் மாதிரி செந்தில் சுய கௌரவத்துடன் யோசிக்கும் விதமாக கதை சுவாரசியமாக அமைந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News