செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

நம்ம இயக்குனர்களின் செண்டிமெண்ட் காட்சிகள்.. இது இல்லாம படம் எடுக்கவே மாட்டாங்க!

காலங்காலமா கோலிவுட்ல படம் எடுத்து ஹிட் கொடுக்குற எல்லா டைரக்டருக்கும் சில சென்டிமென்ட்ஸ் இருக்கு. பைக் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி கிக்கரை மிதிக்கிறதும், சாப்பாட்டுக்கு முன்னாடி செல்ஃபி எடுக்குறதும் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி இந்த டைரக்டர்ஸுக்கும் இதெல்லாம் ரொம்ப முக்கியம்.

இவங்களோட படத்துல எல்லாம் கதை இருக்கோ இல்லையோ இந்த மாதிரி ஷாட் எல்லாம் கண்டிப்பா இருக்கும். அப்படி நம்ம டைரக்டர்ஸ் எடுக்குற சென்டிமென்ட் ஷாட்ஸ் ஆஃப் செஞ்சிட்டீங்க என்னன்னு பார்க்கலாம்.

மணிரத்னம் :

இயக்குநர் மணிரத்னம் படத்துல ரயிலோடு விளையாடி, ரயிலோடு உறவாடினு சொல்ற ரேஞ்சுக்கும் அவரோட எல்லா படத்துலயும் கண்டிப்பா ஒரு ரயில் ஷாட்டாவது இருக்கும். அலைபாயுதே, ஓகே கண்மணி, ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால்னு அவரோட எல்லா படத்துலயும் கண்டிப்பா ரயில் இருக்கும்.

alaipayuthey-train-scene
alaipayuthey-train-scene

சுந்தர் சி :

சுந்தர்.சி படத்துல ஆள் மாறாட்டம் பண்றது, முகத்துல மரு வெச்சு காமெடி பண்றது, சீரியசான டைம்ல காமெடி பண்றதுனு இவரோட எல்லா படத்துலயும் பாரம்பரியமா பல ஷாட்ஸ் வெச்சு இருப்பார். இவருக்கு நாயின்னா ரொம்ப பிடிக்கும் போல. அதனாலேயே இவரோட படத்துல முக்கியமான ஷாட் எல்லாத்துலேயும் ஒரு நாய் கண்டிப்பா இருக்கும். அன்பே சிவம், கலகலப்பு படத்துல எல்லாம் முக்கியமான திருப்பம் நாயாலதான் ஏற்படுற மாதிரி வெச்சு இருப்பார்.

anbesivam-dog
anbesivam-dog

மிஷ்கின் :

மிஷ்கின் டிரேட் மார்க் சென்டிமென்ட் ஷாட் காலைக் காட்டுறதான். இவரோட படத்துல மேக் அப் மேன் யாருக்கும் வேலையே இல்லாத அளவுக்கு காலுக்கு மட்டும் ஷாட் வெச்சு கதையும் காலும்னு படத்தை முடிச்சு இருப்பார்.  அவருடைய சித்திரம் பேசுதடில இருந்து சைக்கோ வரைக்கும் காலுக்குதான் முக்கிய ரோல். கால்கள்தான் உண்மை பேசுது வாய் பொய் சொல்லுதுனு இவரே ஒரு பேட்டியில் காலுக்கு சப்போர்ட் பண்ணி பேசி இருக்கார்.

myskin-major-leg-shots
myskin-major-leg-shots

கெளதம் மேனன்:

கெளதம் மேனன் படத்துல முக்கியமான ஒரு ஷாட்னா அது கண்டிப்பா காபி ஷாப்தான். அழகான புரோபோசல் சீன், லவ் டயலாக்ஸ் எல்லாம் காபி ஷாப்ல எடுக்கிறதுதான் இவரோட அழுத்தமான சென்டிமென்ட்ஸ் ஷாட். மின்னலே, வாரணம் ஆயிரம், காக்க காக்க, என்னை அறிந்தால், வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயானு எல்லா ஹிட் படத்துலையும் ஒரு காபி ஷாப் ஷாட் வெச்சு இருப்பார்.

gautham-menon-favorite-coffeshop
gautham-menon-favorite-coffeshop

ஹரி :

ஹரிக்கு ஆகாயத்துல இருந்து டாப் வியூவ்ல வைக்கிற ஷாட் இருக்கும். தமிழ்நாட்டுல எதாவது ஒரு டாட்டா சுமோவை பார்த்தீங்கனா அது ஹரி படத்துல அடி வாங்குன சுமோவாதான் இருக்கும். அந்த அளவுக்கு இவர் சுமோவைப் பறக்கவிட்டு ஷாட் பண்ணி இருப்பார்.

saamy-sumo-blast-scene
saamy-sumo-blast-scene

ஷங்கர் :

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரோட சென்டிமென்ட் ஷாட் ஊர்ல உள்ள மக்கள் எல்லார்கிட்டயும் மைக்கைக் கொடுத்து அவங்களோட கருத்தைக் கேட்பார். முதல்வன் படத்துல ஆரம்பிச்சு இந்தியன், அந்நியன், சிவாஜினு கிட்டத்தட்ட எல்லா படத்துலயும் மக்கள்கிட்ட மைக்கை நீட்டி கருத்து கேட்குற ஷாட் வெச்சுடுவார்.

sivaji-press-scene
sivaji-press-scene

எம். ராஜேஷ் :

இப்போ இருக்குற டைரக்டர்கள்லையே வித்தியாசமான சென்டிமென்ட் இருக்குற டைரக்டர்னா அது கண்டிப்பா ராஜேஷ் தான். சரக்கு இல்லாம, ஒயின் ஷாப்ல ஷாட் வைக்காம இவரோட ஒரு படம் வராது. அந்த அளவுக்கு அதை முக்கியமான சென்டிமென்டா நினைக்கிறார். முக்கியமா இதுக்கெல்லாம் நீங்க ஆச்சர்யப்படக் கூடாது. அவரோட படத்துல ஒயின் ஷாப்புக்கு வெளியே ஷாட் இருந்தாதான் ஆச்சர்யப்படணும்.

sms-wineshop-scene
sms-wineshop-scene

வெங்கட் பிரபு :

கடைசியா வெங்கட் பிரபுவோட சென்டிமென்ட் ஷாட் ஒண்ணு இருக்கு. மத்த டைரக்டர்ஸ் எல்லாம் மழையையும், ரயிலையும், கடலையும் சென்டிமென்ட் ஷாட்டா காட்டுறப்போ இவருக்கு பிரேம்ஜியைக் காட்டுறதே சென்டிமென்ட்தான். இவரோட படத்துல கதை இருக்கோ இல்லையோ பிரேம்ஜி இல்லாம படம் எடுக்க மாட்டார். இவர் ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ், செகண்ட் இன்னீங்ஸ்னு எத்தனை இன்னிங்ஸ் எடுத்தாலும் எல்லாத்துலேயும் கண்டிப்பா இடம் பிடிச்சுடுவார் பிரேம்ஜி.

premji-venkatprabhu-sentiment
premji-venkatprabhu-sentiment
- Advertisement -spot_img

Trending News