ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

September Release Tamil Movies: செப்டம்பர் மாதம் விழா கோலம் போல எக்கச்சக்க படங்கள் வெளியாகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த மாதம் தொடக்கத்திலேயே ஜவான் படம் வெளியான நிலையில் அடுத்ததாக அக்டோபர் மாதம் விஜய்யின் லியோ படம் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களோடு மற்ற படங்களை வெளியிட்டால் கண்டிப்பாக வசூலில் பெருத்த அடி வாங்கும்.

ஆகையால் இந்த இடைப்பட்ட காலத்தை தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தங்களுடைய படங்களை அவசர அவசரமாக வெளியிடுகிறார்கள். ஒரே நேரத்தில் நிறைய படங்கள் வெளியாவதால் கண்டிப்பாக வசூல் பெருத்த அடி வாங்கும் என்பது தெரிகிறது. இந்த சூழலில் பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகிறது.

Also Read : ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

அந்த வகையில் மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் நிலையில் விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் 18 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு அடுத்ததாக ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி இருக்கும் இறைவன் படம் செப்டம்பர் 25 வெளியாகிறது. இதே நாளில் பாம்பாட்டம் என்ற படமும் திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து பிரபாஸின் நடிப்பில் உருவாகி இருக்கும் சலார் படம் செப்டம்பர் 28 வெளியாகிறது. கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் ரத்தம், இடிமுழக்கம், மகாராஜா, புல்லட், ஜாக்சன் துரை 2 போன்ற படங்களும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

Also Read : ஒட்டுமொத்த ஈகோவால் நாசமாய் போகும் நடிகர் சங்கம்.. விஷால் போட்ட தப்பு கணக்கு

இதைத்தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமும் இந்த மாதம் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது. ஜிவி பிரகாஷின் காதலிக்க யாருமில்லை, சசிகுமாரின் நனா நனா, வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு போன்ற படங்களும் செப்டம்பர் மாதம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது.

இந்த படங்களோடு சிறிய பட்ஜெட் படங்களும் நிறைய வெளியாகிறது. மேலும் விஷால், லாரன்ஸ் போன்ற நடிகர்கள் எப்படியும் ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று மார்க் ஆண்டனி, சந்திரமுகி 2 படங்களில் நடித்த நிலையில் போட்டிக்கு இத்தனை படங்கள் இருப்பதால் தலை தப்புமா என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

Also Read : அம்புட்டு காசுக்கும் கணக்கு காட்ட சொன்ன உயர்நீதிமன்றம்.. கடும் எச்சரிக்கையால் டப்பா டான்ஸ் ஆடிய விஷால்

Trending News