புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நடிகருடன் கள்ள உறவில் இளம் நடிகை.. மோகத்தால் கட்டிய பொண்டாட்டியை விவாகரத்து செய்த நடிகர்!

சமீபகாலமாக சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கள்ளக்காதல் பிரச்சனைகள் சீரியல் வட்டாரங்களில் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. சமூக வலைதளத்தை திறந்தாலே, இவரை அவர் வைத்துள்ளார், அவரை இவர் வைத்துள்ளார் என்ற செய்திகள் தான்.

அந்த வகையில் கடந்த வருடம் சர்ச்சைகளுக்கு பெயர் போன தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடித்த நடிகருடன் திருட்டுத்தனமான கள்ள உறவில் இருந்தாராம் அந்த இளம் நடிகை. அந்த நடிகையோ சமீபத்தில் நடைபெற்ற பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கேயும் கூட சக போட்டியாளர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்தார். மேலும் பெரிய முதலாளி நிகழ்ச்சியில் அந்த நடிகையின் கள்ளக்காதலர் கலந்துகொள்ள இருந்த நிலையில், உள்ளே வந்தால் உண்மை தெரிந்துவிடும் அவரை வீட்டிற்குள் அனுப்ப வில்லையாம்.

இது ஒருபுறமிருக்க அந்த நடிகருடன் இளம் நடிகை கள்ள உறவில் இருந்த போதே அந்த நடிகர் வீட்டில் பல பஞ்சாயத்துகள் ஏற்பட்டதாம். அந்த நடிகர் இத்தனைக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க நல்ல கலராக இருந்ததால் இந்த இளம் நடிகை அந்த நடிகரின் மீது ஆசை கொண்டாராம்.

அவரும் இளம் கன்று பயமறியாது என தடவி கொடுக்க தன்னுடைய மடியிலேயே படுத்துக் கொண்டாராம். இந்த பஞ்சாயத்து வீட்டுக்கு தெரிய அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த இளம் நடிகையின் மீதிருந்த மோகத்தால் கட்டிய மனைவிக்கு பிடிக்கவில்லை என முடிவெடுத்து விட்டாராம்.

சரிதான் போயா என தன்னுடைய பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்றாராம் நடிகரின் மனைவி. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அவருடன் விவாகரத்து செய்துவிட்டதாக என்னமோ கோல்டு மெடல் வாங்கியது போல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் எல்லாம் அந்த கள்ளக்காதலுக்கு தானே என கிண்டல் செய்கிறார்களாம்.

மேற்கொண்டு அந்த கள்ளக் காதலியான இளம் நடிகையுடன் அதே தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு சீரியலில் ஜோடியாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கிறதாம். இது தான் அனைத்திற்கும் காரணம் என்கிறார்கள் அவர்கள் குடும்பத்தார்.

Trending News