வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

போலீசுக்கு டிமிக்கி கொடுக்க நினைத்த அர்ணவ்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கும்மாங்குத்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அர்ணவ். ஏற்கனவே சன் டிவியில் கல்யாணப்பரிசு உள்பட சில சீரியல்களில் நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவிக்கு திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி நடிகை திவ்யஸ்ரீ அவர் மீது சரமாரியாக புகார் கொடுத்திருந்தார். அதாவது கர்ப்பிணியான அவரை சக நடிகையுடன் இருக்கும் கள்ள உறவின் காரணமாக அர்ணவ் அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

Also read:சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட விஜய் டிவி.. பற்றி எரியும் கள்ளக்காதல் விவகாரம்

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சன் டிவியில் கல்யாணப்பரிசு சீரியலில் அர்ணவுடன் இணைந்து நடித்த சக நடிகை அவர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது சூட்டிங் ஸ்பாட்டில் அர்ணவ் நடிகைகளிடம் அத்துமீறி பேசுவார் என்றும் வீட்டிற்கு வர சொல்லி கேட்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஒரு நடிகையிடம் நீ ஓகே சொன்னால்தான் நான் உன் மேல் கை வைப்பேன் என்று படுமோசமாக பேசி இருக்கிறார். இதனாலேயே சில நடிகைகள் அவரிடம் பேசவே மாட்டார்களாம். இப்படி அவர் குறித்து வெளிவரும் செய்திகள் அவருடைய ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

Also read:கள்ளத்தொடர்பால் கர்ப்பிணி மனைவியை அடித்த கணவன்.. சீரியலை விட மோசமான நிஜ வாழ்க்கை

இது ஒரு புறம் இருக்க அர்ணவ் தன்னை நல்லவன் போல் காட்டிக் கொள்ள தன் மனைவியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஆனால் கர்ப்பிணி பெண்ணை தாக்கிய காரணத்திற்காக காவல் நிலையத்தில் அவர் ஆஜராகும் படி போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் எங்கே கைது செய்யப்பட்டு விடுவோமோ என்று பயந்த அர்ணவ் ஆஜராகாமல் தப்பித்துக் கொண்டே வந்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று அவர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் தனக்கு கண்ணில் அடிபட்டுள்ளது என்று ஒரு காரணத்தை கூறி வர மறுத்திருக்கிறார். ஆனால் அவர் பொய் சொல்லி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதை கேள்விப்பட்ட போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து உடனே படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரை கைது செய்து இருக்கின்றனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் யார் மீது குற்றம் இருக்கிறது என்பதை போலீசார் ஆதாரத்துடன் வெளியிட இருக்கிறார்கள்.

Also read:குடும்பத்தையே பகடைக்காயாய் உருட்டிய பாரதி.. சீக்கிரமா சோழிய முடிச்சு விடுங்கய்யா சாமி

Trending News