விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் காவியா அறிவுமணி. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிகை சித்ரா முல்லை என்ற கதாபாத்திரத்தை திறம்பட நடித்து வந்தார். அவர் இறந்த பிறகு முல்லை கதாபாத்திரத்தை காவியா ஏற்று நடித்தார்.
இந்நிலையில் சினிமா பட வாய்ப்பு வந்ததால் சீரியலை விட்டு விலகி விட்டார். அதன்படி மிரள் என்ற படத்தின் மூலம் வெள்ளிதிரையில் காலடி எடுத்து வைத்தார். அந்த படம் பெரிய அளவில் போகாத நிலையில் ரிப்பப்பரி என்ற படத்தில் நடித்திருந்தார்.
லுக்கில் மிரட்டும் காவியா
காவ்யா விதவிதமான போட்டோ சூட் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இப்போது புடவையில் கும்மனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
மாடர்ன் உடையில் மின்னும் காவியா
விதவிதமான போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களை கிறங்க அடித்திருக்கிறார். அடிக்கிற வெயிலுக்கு இந்த புகைப்படங்கள் இன்னும் சூடை ஏற்றி உள்ளது. இதன் மூலம் காவியா அறிவுமணிக்கு வெள்ளித்திரைகள் நிறைய வாய்ப்பு கிடைக்க உள்ளது.
முதல் மரியாதை ராதா போல் போஸ்
மாடல் உடையில் மாஸ் காட்டி வந்த காவியா இப்போது புடவையில் இருக்கும் போட்டோவுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளி வருகிறது. சீரியல் மற்றும் வெள்ளித்திரையில் இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களை காவியா மகிழ்வித்து வருகிறார்.