புதன்கிழமை, ஜனவரி 15, 2025

35 கிலோ உடல் எடையை குறைத்த பிரபல சீரியல் நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

சன் டிவியில் பிரபலமான சீரியல்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் இயக்குனரும் தயாரிப்பாளருமான திருமுருகன் அவர்களின் ‘தேன் நிலவு’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை கிருத்திகா. இவர் அதன் பின்பு தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் மீனுக்குட்டி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் இளைஞர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறி விட்டார். இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது பழைய படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

ஏனென்றால் பழைய புகைப்படத்தில் கிருத்திகா உடல் பருமனாக இருப்பதால், கிருத்திகாதானா இது? என்று அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். அதன்பின் யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் பேட்டி அளித்த கிருத்திகா, எப்படி தன்னுடைய உடல் எடையை குறைத்தேன்? என்பது பற்றிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே குண்டாக இருக்கும் கிருத்திகா, திருமணமாகி அதன்பின் குழந்தை பிறந்த பிறகு 70 கிலோ எடையிலிருந்து 99 கிலோ உடல் எடை அதிகரித்து ரொம்பவே குண்டாக மாறி உள்ளார். அதன்பின்பு தன்னால் பிடித்த ஆடையை கூட வாங்கி போட்டுக் கொள்ள முடியாத நிலை இருந்ததால், தன் மீது தனக்குத்தானே ஏற்பட்ட கோபத்தால் உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்ற வெறி தான் கிருத்திகாவை இவ்வளவு அழகாக மாற்றியுள்ளது.

serial-actress-cinemapettai1
serial-actress-cinemapettai1

இதற்காக சரியான டயட் நிபுணரை அணுகி திரவ உணவு முறையை பின்பற்றி, சுமார் 35 கிலோ உடல் எடையை வெறும் 6 மாதத்திற்குள் குறைத்துள்ளார் கிருத்திகா. தொடக்கத்தில் உடல்எடை குறையவில்லையாம். அதன் பின்பு ஒரு மாதம் கழித்து தான் உடல் எடை குறைய தொடங்கியதாம். டயட் உடன் வாக்கிங், தோப்புக்கரணம் போன்ற சின்ன சின்ன உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டதால்,

அவரது உடல் குறைவதற்கு உதவியாக இருந்ததாக கிருத்திகா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். சீரியல்களில் பெரும்பாலும் ஹோம்லி லுக் கதாபாத்திரத்தில் நடிக்கும் கிருத்திகாவின் ரசிகர்கள் அவருடைய பழைய புகைப்படத்தை பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Trending News