புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கயல் சீரியல் நடிகைக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சர்.. பரபரப்பாகும் சின்னத்திரை வட்டாரம்

சினிமா துறை உட்பட பல்வேறு துறைகளிலும் பாலியல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை இந்த பிரச்சனைகளால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் தைரியமாக தங்களுடைய அனுபவங்களை பொதுவெளியில் முன் வைக்கின்றனர். இதே போன்று தனக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வை சின்னத்திரை பிரபலம் அபிநவ்யா மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவளே என்ற மெகா தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் அபிநவ்யா. அந்த சீரியலை தொடர்ந்து இவர் தற்போது கயல், சித்திரம் பேசுதடி போன்ற சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால் நடிக்க வாய்ப்பு தேடி அவர் 250க்கும் மேற்பட்ட ஆடிஷன்களில் கலந்து கொண்டுள்ளார்.

அப்படி கலந்து கொண்டபோது பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அவரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி கேட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வை பற்றி கூறிய அபி நவ்யா சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையில் நடிப்பதும் ரொம்பவும் கஷ்டம். பெண்கள் அனைத்து இடத்திலும் தைரியமாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சினிமா துறையில் சமீபகாலமாக பெண்கள் பலரும் தங்களுக்கு நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை மீ டூ என்ற பெயரில் சோஷியல் மீடியாவில் தெரியப்படுத்தி வருகின்றனர். ஆனால் சின்னத்திரையில் இதுபோன்ற புகார்கள் இதுவரை யாரும் சொன்னதில்லை.

தற்போது சின்னத்திரை நடிகைக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அபி நவ்யாவின் இந்த தைரியமாக பேச்சு அனைவரின் பாராட்டையும், ஆதரவையும் பெற்று வருகிறது.

Trending News