தளபதி விஜய் படங்களில் நடிக்கும் சின்ன சின்ன நடிகர் நடிகைகளும் அந்த படங்களின் வெளியீட்டுக்கு பிறகு பிரபலமாகி விடுவார்கள். யாருனே தெரியாத நடிகர்கள் கூட திடீரென வைரலாவது அடிக்கடி நடந்து வருகிறது.
அந்த வகையில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபர் போன்ற பல நட்சத்திரங்கள் தற்போது தமிழ் ரசிகர்களிடையே பரீட்சயமானவர்களாக இருக்கின்றனர். பெரியவர்களுக்கு மட்டுமல்ல. விஜய்யுடன் நடிக்கும் குட்டி குட்டி குழந்தைகளும் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.
அப்படிப் பார்க்கையில் மெர்சல் படத்தில் நடித்த குட்டி பையன், தெறி படத்தில் நடித்த மீனா மகள் நைனிகா, சமீபத்தில் பிகில் மற்றும் மாஸ்டர் படத்தில் விஜய் உடன் நடித்து ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் சிறுவன் பூவையார் போன்றோரைச் சொல்லலாம்.
இந்த மாதிரி சமூக வலைதளங்களின் எழுச்சி அப்போதே இருந்திருந்தால் இன்னும் பல குழந்தைகள் பிரபலமாகி இருப்பார்கள். விஜய்யுடன் அப்போதில் இருந்து இப்போது வரை பலரும் குடும்பத்துடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அப்படி செல்லும்போது விஜய் அந்த குழந்தைகளை கையில் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பது வழக்கம். அப்படித்தான் கலர்ஸ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகி ஹீமா பிந்து என்பவரும் விஜய்யை சந்தித்து சிறுவயதில் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதனை சமீபத்தில் வந்த விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.