Vijay TV: விஜய் டிவியில் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் சீரியலில் புரோமோவை சமீபத்தில் பார்த்திருப்போம். மௌன ராகம் சீரியலுக்கு பிறகு ரவீனா இந்த சீரியலில் ஹீரோயின் ஆக களமிறங்கி இருந்தார்.
மேலும் ஈரமான ரோஜாவே மற்றும் வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர்களில் ஹீரோவாக நடிக்கும் திரவியம் இந்த சீரியலில் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார்.
சன் டிவியின் செல்லமா சீரியலில் நடித்த ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் கிராமத்து பெண்ணாக பவித்ரா பி நாயக் ஆகியோரும் இந்த சீரியலில் நடித்திருக்கிறார்கள்.
டாட்டா காட்டிய ரவீனா
இரு வேறு குணங்கள் கொண்ட ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் சீரியல் கதை.
இந்த நிலையில் ப்ரோமோவில் மட்டும் தலை காட்டி விட்டு ரவீனா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கான சரியான காரணம் என்னும் தெரியவில்லை.
அவருக்கு பதிலாக வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் வில்லியாக மிரட்டிக் கொண்டிருக்கும் ஆர்த்தி சுபாஷ் இந்த சீரியலின் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார்.