வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்னை பற்றி பேசினால் செருப்பு பிஞ்சிடும்.. பயில்வானுடன் பீச்சில் மல்லு கட்டிய ரேகா நாயர்

யூடியூப் சேனல்கள் மூலம் சினிமா பிரபலங்கள் பற்றிய பல விஷயங்களை பேசி பரபரப்பை கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நடிகைகளை பற்றி மிகவும் மோசமாக பேசி வரும் இவரிடம் சின்னத்திரை நடிகை நடுரோட்டில் சண்டையிட்டது தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரேகா நாயர் பல விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுக்கக் கூடியவர். சில வருடங்களுக்கு முன்பு இறந்த விஜே சித்ராவின் தற்கொலை வழக்கில் கூட இவர் தைரியமாக பல உண்மைகளை பேசியது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்திருந்தார். அதாவது அந்த படத்தில் அவர் கொஞ்சம் மோசமாக நடித்திருந்தார். இந்த காட்சி சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும் ரேகா நாயர் அது குறித்து விளக்கம் அளித்து இருந்தார்.

கதைக்கு தேவையாக இருந்த பட்சத்தில் நான் அப்படி நடித்தேன் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் இது பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் மிகவும் மோசமாக குறிப்பிட்டு பேசியிருந்தார். அதாவது அவர் நடிப்பில் எந்த எல்லைக்கும் செல்வார் என்றும், இயக்குனர் பார்த்திபனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்றும் மிகவும் கீழ்த்தரமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று பயில்வான் ரங்கநாதனை எதேச்சையாக ரோட்டில் பார்த்த ரேகா நாயர் அவரிடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளார். என்னைப் பற்றி எதுவும் தெரியாத நீங்கள் எப்படி அவதூறாக பேசலாம் என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு பயில்வான் ரங்கநாதன் நீ அப்படி நடித்ததால் தான் நான் பேசினேன் என்று பதிலுக்கு சண்டையிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரேகா நாயர் நான் என்ன உன் மனைவியா இல்ல பிள்ளையா என்னை பற்றி எதுக்கு பேசுற, இதுக்குமேல் அசிங்கமாக பேசினால் செருப்பு பிஞ்சிடும் என்று ஆக்ரோஷமாக சண்டையிட்டார். இதனால் சிறிது நேரம் அந்த இடமே பரபரப்பானது.

அதன் பிறகு அங்கு சுற்றி இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இது குறித்து பேசிய பயில்வான், அவ என்னிடம் பேச முடியாமல் பயந்து ஓடிட்டா என்று மோசமாக பேசியது கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.

உண்மை நிலை என்ன என்று தெரியாமல் நடிகைகளை பற்றி மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பயில்வானுக்கு ரேகா நாயர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இருந்தாலும் பயில்வான் ரங்கநாதன் திருந்தி விடப் போவதில்லை. ஏற்கனவே இவரை நடிகை ராதிகா நடுரோட்டில் வைத்து கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News