சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஒரு சட்டைக்குள்ள இரண்டு பேர்.. இறுக்கி அணைச்சி சரண்யாவின் ரொமேன்டிக் புகைப்படம்

சினிமா துறையில் தனது வாழ்க்கையை நியூஸ் ரிப்போர்ட்டராக தொடங்கி, தற்போது சீரியல்களிலும் படங்களிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை சரண்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை எனும் தொடரின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து ரன் மற்றும் ஆயுத எழுத்து ஆகிய தொடர்களிலும் சரண்யா நடித்துள்ளார். மேலும் சரண்யா ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

அதேபோல் சரண்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலரும், வருங்கால கணவருமான ராகுல் சுதர்சனை தனது ரசிகர்களுக்கு அறிமுகம்  செய்துவைத்தார். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்தது.

இந்த நிலையில் நடிகை சரண்யா ராகுலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறார்.

அதாவது நடிகை சரண்யா சோஷியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். அதே போல் அவ்வப்போது புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் சரண்யா.

அந்த வகையில் சரண்யா தற்போது ஒரே சட்டையில் அவரும் ராகுலும் நெருக்கமாக இருக்கும்படி உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, கடைசி வர கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா என்று கலாய்த்து வருகின்றனர்.

Trending News