திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சின்னத்திரை நடிகையால் நிம்மதியைத் தொலைத்த சிம்பு.. இரவு முழுவதும் கொடுத்த பெருந்தொல்லை

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு என்றும் குறை வைக்காத ஒரே நடிகர் என்றால் அது சிம்பு தான். தற்போது நிம்மதியாக இருக்கும் சிம்பு, சின்னத்திரை நடிகையால் மிகப்பெரிய சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் நடிகர் சிம்புவிற்காக சின்னத்திரை நடிகை ஒருவர் அவரது வீட்டின் வாசல் முன்பு திருமணம் செய்து கொள்ளுமாறு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி வரும் சிம்புவுக்கு திருமணம் எப்போது நடக்கும் என அவரது ரசிகர்களும்,கோலிவுட் வட்டாரமும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி இரவு நேரத்தில் சிம்புவின் வீட்டின் முன் நின்று சிம்புவின் வீட்டிற்குள் என்னை அனுமதிக்க சொல்லுங்கள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவின் வீட்டை புகைப்படமெடுத்து வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி தற்போது பல சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். மேலும் சோஷியல் மீடியாவில் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ள நிலையில், இவர் சிம்புவின் தீவிர ரசிகை ஆவார். மேலும் சிம்புவை பற்றி பல பேட்டிகளில் புகழ்ந்து பேசியும் வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் சிம்புவின் வீட்டு வாசல் முன் நின்று என்னை உள்ளே விட சொல்லுங்கள், நான் சிம்புவிற்கு ஆக மட்டுமே காத்திருக்கிறேன் திருமணம் என்றாள் அது சிம்புவோட தான் எனக்கு நடக்க வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தான் போராட்டம் நடத்துவீர்களா என்னை மாதிரி காதலிக்கும் காதலர்களுக்கும் போராட்டம் நடத்துங்கள் என ஸ்ரீநிதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ஸ்ரீநிதி மீது கடுப்பாகி ஏன் தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறீர்கள். தற்போது தான் சிம்பு அவர் உண்டு அவர் வேலை உண்டு இருக்கிறார். தேவையில்லாத சர்ச்சையில் அவரை மீண்டும் ஈடு படுத்தாதீர்கள் என ரசிகர்கள் ஸ்ரீநிதியிடம் அட்வைஸ் செய்துள்ளனர்.

மேலும் ரசிகர்களின் கமெண்ட்ஸ் னகளை படித்து வரும் ஸ்ரீநிதி இதுகுறித்து தனிப்பட்ட முறையில் எதுவும் பேசாமல் உள்ளார். மேலும் சின்னத்திரை பிரபலங்களே இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது, சாதாரண ரசிகர்கள் இதை பார்த்து தேவையில்லாமல் பின்னாளில் அவரவர்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகள் வீட்டின் முன் நிற்க ஆரம்பித்து விடுவார்கள் எனவும் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Trending News