சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பெத்தவங்கள விட காதல் தான் முக்கியம்.. இளம் நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் டிவி நடிகை

பிரபல தொலைக்காட்சியில் வில்லி வேஷம் கட்டி வந்த நடிகை சோசியல் மீடியாவில் வெகு பிரபலம். அதை வைத்து அடுத்தடுத்த வாய்ப்புகளை கைப்பற்றிய நடிகைக்கு ஜாக்பாட் அடித்தது போல் கிடைத்தது அந்த பெரிய வீட்டு நிகழ்ச்சி.

இதற்காகவே காத்திருந்த நடிகை பக்கா பிளான் போட்டு நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். ஆனால் கூட்டத்தோடு கூட்டமாக வரக்கூடாது என்று முடிவு கட்டிய நடிகை பயங்கர ஸ்கெட்ச் போட்டு என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு தான் நடிகை இருந்தார்.

போகப் போக அவருடைய இன்னொரு முகம் வெளிப்பட்டது. ஆனால் இப்போது அது அனைத்தும் திட்டமிட்ட பிளான் என்ற தகவல் கசிந்துள்ளது. இப்படி எல்லாம் ப்ளான் போட்டு நினைத்ததை சாதித்த நடிகை இளம் நடிகர் ஒருவருடன் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறாராம்.

Also read: அந்தரத்தில் தொங்கும் சீரியல் நடிகையின் வாழ்க்கை.. அம்பலமான கணவனின் குட்டு

ஏற்கனவே நடிகையின் காதல் பலரும் அறிந்தது தான். ஆனாலும் அதை உறுதிப்படுத்தாமல் சைலண்டாக இருந்த நடிகை இப்போது துணிந்து ஒரு வேலையை செய்திருக்கிறார். அதாவது இந்த காதலுக்கு நடிகையின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

உடனே அம்மணி எதைப் பற்றியும் யோசிக்காமல் எனக்கு என்னோட பாய் ஃப்ரெண்ட் தான் முக்கியம் என துணிந்து வெளியேறி இருக்கிறார். இப்படி இருக்கும் நடிகையா ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல் சீன் போட்டார் என சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.

Also read: மகுடிக்கு மயங்கிய பாம்பான நடிகர்.. இஷ்டத்துக்கு வளைக்கும் மனைவி

Trending News