வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Gossip : தலைகனத்தில் ஓவர் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை.. கடைசில முதலுக்கே வந்த மோசம்

ஒரு ஹிட் கொடுத்து விட்டாலே சில பிரபலங்கள் தலையில் கொம்பு முளைத்து விடும். அப்படித்தான் தற்போது சீரியல் நடிகை ஒருவரும் சூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் தலை கனத்துடன் நடந்து ஆப்பு வாங்கி இருக்கிறார்.

பிரபல சேனலில் ஒளிபரப்பான பூ சீரியலில் நடித்த நடிகை ரசிகர்கள் மனதில் பச்சக் என ஒட்டிக்கொண்டார். அவருடைய கலக்கல் நடிப்பை பார்ப்பதற்கே ரசிகர்கள் குவிந்தனர்.

இதனால் சேனலின் டிஆர்பியும் உயர்ந்தது. ஆனால் எவ்வளவு நாள் தான் சீரியலை இழுக்க முடியும். அதனால் ஒரு நல்ல நாளில் அந்த சீரியலுக்கு சுபம் போட்டனர்.

அதை அடுத்து மற்றொரு சேனலில் நடிக்க கமிட் ஆனார் நடிகை. ஆனால் இடையில் பர்சனல் விஷயங்களை வைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார்.

அப்புறம் என்ன ஆனதோ தெரியவில்லை திடீரென மீண்டும் நடிக்க வந்தார். அந்த சேனலும் புதிதாக தொடங்கப்பட்ட சீரியலில் நடிகைக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது.

இப்பொழுது பார்த்தால் நடிகையின் கேரக்டரையே அந்த சீரியலில் முடித்து விட்டார்கள். விசாரித்ததில் நடிகை கொஞ்சம் அல்ல ரொம்பவே திமிருடன் நடந்து கொண்டாராம். பொறுத்து பொறுத்து பார்த்த சேனல் தரப்பு இப்போது அவரை கைகழுவி விட்டது.

இதனால் நடிகை இப்போது செம கடுப்பில் இருக்கிறாராம். யாராவது இது பற்றி கேட்டால் கடும் கோபத்தோடு பதிலளித்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News