வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விடுகிறார்கள். இவர்களுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் இவர்களை வைத்து வெளிநாட்டில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல சேனலில் காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபலம் ஒருவர் வெளிநாடுகளுக்கு சென்று வருவார். சின்னத்திரையில் இருந்த போது அடக்கி வாசித்த அந்த நடிகை தற்போது வெள்ளி திரைக்குப் போனவுடன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.
Also Read :எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை
பார்ப்பதற்கு சில்வண்டு போல் உள்ள அந்த நடிகையின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறதாம். பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போது அந்த நடிகைக்கான டிக்கெட் செலவு மட்டும் தான் ஏற்றுக் கொள்வார்கள். ஆரம்பத்தில் சென்ற நிகழ்ச்சிகளில் இவ்வாறு அந்த சில்வண்டு நடிகை ஒத்துக் கொண்டுள்ளார்.
ஆனால் தற்போது வெள்ளி திரைக்கு சென்றவுடன் அந்த நடிகைக்கு தலைகனம் பிடித்து விட்டதாம். அதாவது தன்னைத் தவிர தன் குடும்பத்திற்கு ஐந்து டிக்கெட்டுகள் போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கண்டிஷன் போடுகிறாராம். அதுமட்டுமின்றி சாப்பாடு செலவு, ரூம் செலவு எல்லாமே நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.
Also Read :காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!
இதனால் அதிர்ச்சி அடைந்த சில தயாரிப்பாளர்கள் இவருக்கு பதிலாக வேறு நடிகையை பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவெடுத்துள்ளார்களாம். ஆனால் இந்த நடிகைக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் வேறு வழியின்றி அவர் சொன்ன கண்டிஷனுக்கு ஒற்றுக் கொண்டுள்ளனர் சில தயாரிப்பாளர்கள்.
சில்வண்டு நடிகை நடித்த முதல் படம் மட்டுமே வெளியாகி உள்ளது. அந்தப் படத்தில் அவருக்கு பெரிய அளவில் ஸ்கோப்பும் இல்லை. ஆனால் அதற்குள்ளாகவே இவ்வளவு பந்தா காட்டும் இந்த நடிகை இப்படியே சென்றால் கேரியர் மொத்தமாக முடிந்துவிடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Also Read :20 வருஷம் நடித்தும் பிரயோஜனமே இல்ல.. ஒரேடியாக ஏங்கும் தங்கத்தட்டில் பிறந்த நடிகர்