திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிம்புகாக தர்ணாவில் ஈடுபட்ட சீரியல் நடிகை.. ப்ளீஸ் கல்யாணம் பண்ணி வைங்க

சிம்பு மீண்டும் சினிமாவில் ஃபுல் ஃபார்மில் இறங்கியுள்ளார். உடல் எடை அதிகமாகி, தன்னுடைய படங்கள் தொடர்ந்து தோல்வியை தந்ததால் சிம்பு மிகுந்த மன வேதனையில் இருந்தார். மேலும் கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாகி இருந்தது.

இப்படம் தோல்வியை சந்தித்தாலும், மீண்டும் சிம்பு பழையபடி ஸ்லிம்மாக வந்துள்ளார் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் சிம்புவின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது.

மேலும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு சிம்புக்கு கிடைத்தது. இப்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சின்னத்திரை சீரியல் நடிகையான ஸ்ரீநிதி விஜய் டிவியில் பல தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களாக ஸ்ரீநிதி தொடர்ந்த பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு நாள் எல்லாருக்கும் திருமணம் ஆகிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் சிங்கிளா இருப்போம் என ஸ்ரீநிதி பதிவிட்டிருந்தார்.

அதற்கு ஒரு ரசிகர் நீங்கள் ரெண்டு பேருமே திருமணம் செய்து கொள்ளலாமே என கமெண்ட் போட்டு இருந்தார். அதற்கு இதுவும் நல்லாதான் இருக்கு என பதிலளித்திருந்தார். இந்நிலையில் சிம்புவின் வீட்டின் முன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்ரீநிதி தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இத்தனை ஆண்டுகள் எனக்காக தான் நீங்கள் சிங்கிளாக இருந்தீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, இன்னைக்கு தான் எனக்கு புரிந்துள்ளது, எல்லோரும் எங்களை சேர்த்து வையுங்கள் ப்ளீஸ் என ஸ்ரீநிதி பதிவிட்டுள்ளார். இவர் நிஜமாகவே சிம்புவை காதலிக்கிறாரா அல்லது பிரபலம் அடைவதற்காக இப்படி செய்கிறார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Trending News