சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சின்னத்திரையில் ரீ-என்ட்ரியாகும் பிரபல அஜித் பட நடிகை.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ப்ரோமோ வீடியோ!

தற்போதெல்லாம் ஒவ்வொரு சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு, புதுப்புது சீரியல்களை உருவாக்கி, ஒளிபரப்பி தங்களது சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்தி வருகின்றனர். அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் மாதத்திற்கு ஒரு புதிய தொடரை அறிமுகப்படுத்தி மக்களை தன்பால் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

அதாவது 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி, அஜித், விஜய், சூர்யா, கமல், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களை தன்பால் ஈர்த்தார். அதிலும் தேவயானியின் புன்னகைகென்றே தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளம் அந்த காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து  கொண்டு செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதேபோல், திருமணத்திற்கு பிறகு கிடைக்கும் பட வாய்ப்புகளில் சிறு சிறு வேடங்களில் நடித்த தேவயானி, வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி இருக்க தற்போது தேவயானி மீண்டும் புதிய சீரியல் ஒன்றின் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். எவ்வாறெனில், தேவயானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்னும் தொடரில் நடிக்கவுள்ளாராம்.

மேலும் இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலர், தேவயானியை சின்னத்திரையில் காண ஆவலோடு இருப்பதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News