Serial: சின்னத்திரை பொருத்தவரை சீரியல் தான் மக்கள் மனதை கொள்ளையடித்து அனைவரும் பார்க்கும் படியாக விறுவிறுப்பை கொடுத்து வருகிறது. அதனால் தான் தாத்தா பாட்டி காலத்தில் இருந்து இப்போது வரை குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அவர்களுடைய பொழுதுபோக்காக தினமும் சீரியல்களை பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் சன் டிவி,விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்கள் போட்டி போட்டு பல சீரியல்களை ஒளிபரப்பு செய்கிறார்கள். ஆனால் தற்போது சில சொதப்பல் கதைகளால் மக்களின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்து வந்த சீரியல்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
இதில் முதலாவதாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல். ஒரு நேரத்தில் இந்த சீரியலை பார்க்காத குடும்பமே இருக்க முடியாது. முக்கியமாக பெண்களை மட்டுமில்லாமல் ஆண்கள் மனதையும் கவர்ந்த சீரியல் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விறுவிறுப்பான கதைகள் இருந்தது.
ஆனால் தற்போது சும்மா நாடகத்தை கொண்டு வர வேண்டும் என்று இழுத்து அடித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. நல்லா இருந்த ஒற்றுமையான கூட்டு குடும்பத்தில் சுகன்யா வந்து கும்மி அடித்து விட்டார்.
ஒவ்வொரு பிரச்சனையை செய்து பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களின் நிம்மதி மட்டுமில்லாமல் சீரியலை பார்ப்பவர்களின் நிம்மதியையும் கெடுக்கும் அளவிற்கு கதைகள் சொதப்பலாக அமைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியல் மக்கள் கொண்டாடும் அளவிற்கு இருந்தது.
ஆனால் தற்போது ஆனந்தி கேரக்டரை டேமேஜ் பண்ணும் அளவிற்கு கர்ப்பமான ஒரு விஷயத்தை கொண்டு வந்து ஆனந்தி மற்றும் அன்புக்கு இடையே விரிசல் ஏற்படுத்தும் விதமாக கதைகள் இருப்பதால் சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
அடுத்ததாக கயல் சீரியல் வித்தியாசமான கதைகள் இல்லை என்றாலும் பரவாயில்லை அதற்காக அடுத்தடுத்த பிரச்சினை கொண்டு வந்து கயல் தலையில் கட்டி எழில் நிம்மதியும் பறித்து போரடிக்கும் விதமாகத்தான் கதை இருக்கிறது.
அதனால் தான் இதற்கு கயல் சீரியல் என்ற பெயர் வைப்பதற்கு பதிலாக பிரச்சனை என்று வைத்திருந்தால் கூட பொருத்தமாக இருந்திருக்கும் என்று சில விமர்சனங்கள் ட்ரெண்டிங் ஆகி போய்க்கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து சன் டிவியில் மூன்று முடிச்சு மற்றும் எதிர்நீச்சல் இரண்டாம் பாகமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் மக்கள் மனதில் இருந்து பின் வாங்கி விட்டது.