Serial Trp Rating List: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனதை கவர்ந்த சீரியல் எதுவென்று ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் இன் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் முதல் 5 இடத்தை பிடித்த சீரியல் எதுவென்று ஒரு சின்ன தொகுப்பாக பார்க்கலாம்.
பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களை தான் மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். ஆனாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னே ஜியோஹாட்ஸ்டார் ஆப் மூலம் ஒளிபரப்பு செய்வதால் முக்கால்வாசி பேர் அதில் பார்த்து விடுவதால் டிவியில் பார்ப்பதை தவிர்த்து விட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலை பார்த்து வருகிறார்கள்.
அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து சன் டிவி முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது. இருந்தாலும் விஜய் டிவியில் உள்ள ஒரு சீரியல் ஐந்தாவது இடத்தை தொடர்ந்து பல வாரங்களாக தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் மீனா மற்றும் முத்துவின் எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்த சிறகடிக்கும் ஆசை சீரியல்தான் இந்த வாரம் 7.67 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
அடுத்ததாக மருமகள் சீரியலில் பிரபு மற்றும் ஆதிரைக்கு வரும் பிரச்சனைகளை சரி செய்து அவர்களுடைய நிம்மதியான வாழ்க்கை தேடி வருகிறார்கள். அதிலும் ஆதிரையின் சித்தி செய்யும் சூழ்ச்சியில் பிரபு சிக்கிக் கொண்டு தவிக்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.32 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.01 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தேவிக்கு எப்பொழுது தான் குழந்தை பிறக்கும் என்று பல வருடங்களாக மக்கள் கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைக்கப் போகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்குள் தேவிக்கு குழந்தை பிறக்கப் போகிறது. அத்துடன் விக்னேஷும் மனம் மாறி தேவையை ஏற்றுக் கொள்வார்.
அடுத்ததாக சூர்யா மற்றும் நந்தினியின் கெமிஸ்ட்ரி மக்களே அதிகமாக கவர்ந்து மக்களின் பேவரிட் சீரியலாக மூன்று முடிச்சு சீரியல் இடம் பிடித்திருக்கிறது. தற்போது கதை அடுத்த ட்ராக்கு மாறி இருக்கிறது என்பதற்கு ஏற்ப குடித்துக் கொண்டே இருக்கும் சூர்யா, வேலையில் ஆர்வம் காட்டுவதும் நந்தனிடம் குழந்தை பற்றி பேசுவதும் மக்களை கவர்ந்து விறுவிறுப்பாக கதை நகர ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.29 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. சீரியல் ஆரம்பித்ததிலிருந்து சூர்யா குடித்துக்கொண்டு வரும் காட்சிகள் மட்டும் அதிகமாக இருப்பதால்தான் முதல் இடத்தை நழுவ விட்டு வருகிறது.
மேலும் முதலிடத்தில் கடந்த சில மாதங்களாக இருப்பது சிங்க பெண்ணே சீரியல் தான். அந்த வகையில் இந்த வாரமும் 9.71 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் இரண்டு ஹீரோவாக கலக்கிய அன்பு மகேஷுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு மகேஷ், அன்பு மீது வன்மத்தை கொட்டும் வகையில் கேரக்டர் மாறிவிட்டது. இதனால் ஆனந்தி, அன்புவை எப்படி காப்பாற்றி மகேஷுக்கு புரிய வைப்பார் என்பது தான் விறுவிறுப்பான கதையாக இருக்கிறது.