முதல் 5 இடத்தில் உள்ள சீரியல்கள்.. தட்டு தடுமாறி முன்னேறிய பாக்கியலட்சுமி

Serial : சினிமாவை காட்டிலும் சீரியல் விரும்பிகள் அதிகம் இருந்து வருகின்றனர். இதனால் தான் பிரபல தொலைக்காட்சிகள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து சீரியலை இறக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் டிஆர்பி அடிப்படையில் தமிழ்நாட்டில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்கள் எது என்பது வெளியாகி இருக்கிறது. இதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டும் தான் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வருகின்றனர்.

முதலிடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் இருக்கிறது. இதில் முத்து, மீனா ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றனர். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று சுவாரஸ்யமான காட்சிகளுடன் இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது.

முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்கள்

இரண்டாவது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடர் பெற்றிருக்கிறது. சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்தொடர் விறுவிறுப்பான கதைகளத்துடன் செல்கிறது.

மூன்றாவது இடத்தையும் சன் டிவி தான் கைப்பற்றி இருக்கிறது. பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சிங்கபெண்ணே தொடர் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பத்திற்கான காரணம் மகேஷ் தான் என்பது எப்போது தெரியவரும் என்ற திருத்தங்களுடன் சென்று கொண்டிருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு தொடர் நான்காவது இடத்தில் உள்ளது. குடிக்கு அடிமையாகி இருக்கும் தனது கணவனை திருத்த மனைவி என்னென்ன முயற்சிகள் செய்கிறார் என்ற கதைக்களத்துடன் இத்தொடர் செல்கிறது.

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இதில் இப்போது இனியாவின் காதல் ட்ராக் போய்க்கொண்டிருக்கிறது. அருவையாக சென்று கொண்டிருந்த தொடர் இப்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.