வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. சிங்கபெண்ணிடம் தோற்றுப் போன எதிர்நீச்சல்

TRP Rating Top 6 Serials: என்னதான் புது புது படங்கள் முன்னணி ஹீரோக்கள் நடித்து வெளிவந்தாலும் ஒவ்வொரு நாளும் மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். இதில் போட்டி போட்டு பல சேனல்கள் வந்தாலும் எப்போதுமே நாடகம் என்றால் அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு முதல் இடத்தை பிடித்து விட்டது. அப்படி முதல் ஆறு இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல் பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எத்தனையோ நாடகங்களில் மக்களின் ஃபேவரைட் சீரியலாக இடம் பிடித்தது சிறகடிக்கும் ஆசை. இதில் அம்மா, பெற்ற மகன்களிடமே ஓரவஞ்சகம் காட்டி பாசத்தை பங்கு போட்டு வருகிறார். இதனால் முத்துவிற்கு அம்மாவின் பாசம் கிடைக்காமல் ஏக்கத்துடனும், மனைவி வந்த பிறகு முழுமையான காதலையும் காட்டி எதார்த்தமான நடிப்பை கொடுத்து வருவதால் 6வது இடத்தை பிடித்திருக்கிறது.

ஆரம்பத்தில் கலெக்டர் ஆவது மிகப் பெரிய குதிரைக்கொம்பாக இருந்த சுந்தரிக்கு தற்போது கலெக்டர் ஆன பிறகும் ஒவ்வொரு நாளும் பிரச்சினையை எதிர்கொண்டு போராடும் வகையில் சுந்தரி சீரியல் 5வது இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு அடுத்து கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தை பிடித்து சிறந்த சீரியல் என்று சொல்லும் அளவிற்கு விருதுகளை வாங்கி குவித்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது பின்னடைவுக்கு சென்று 4வது இடத்தை பிடித்திருக்கிறது.

Also read: சக்தியின் நடிப்பை தூக்கலாக காட்டி குணசேகரனை டம்மியாக்கிய எதிர்நீச்சல்.. டிஆர்பிக்காக எடுத்த முயற்சி

அடுத்ததாக போதும்பா ரொம்பவே ஓவரா தான் காட்டுறீங்க அண்ணன் தங்கையின் பாசத்தை எங்களுக்கே வெறுப்பு தட்டது என்று சொல்லும் அளவிற்கு துளசி சின்ராஸின் பாசப் போராட்டமான வானத்தைப்போல சீரியல் 3வது இடத்தை பிடித்திருக்கிறது.

இதற்கு அடுத்து நீ எனக்கு வெறும் நல்ல ஒரு நண்பன் மட்டும்தான் என்று பல வருடங்களாக எழிலை காக்க வைத்து தற்போது தான் மனதில் காதல் பூத்து இருக்கிறது என்று வெளிப்படுத்தும் தருணத்தில் ஏற்பட்ட விபத்தினால் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கும் கயல் சீரியல் 2வது இடத்தை பிடித்திருக்கிறது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துருவோம் என்று சொல்வதற்கு ஏற்ப சமீபத்தில் புத்தம் புது சீரியலாக வந்த சிங்கப்பெண்ணே சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை முதலிடத்தில் தக்கவைத்து கொண்டது. இதில் அன்பு ஆனந்தி மகேஷ்க்கும் இருக்கிற முக்கோண காதலை பார்க்கவே அழகாக இருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப மக்கள் மனதில் நச்சென்று இடத்தை பிடித்து விட்டது. அதனாலயே என்னமோ எதிர்நீச்சல் சிங்கப்பின்னிடம் தோற்றுப் போய் சரிவை சந்தித்து விட்டது.

Also read: சைடு கேப்பில் மகனுக்கு தோள் கொடுக்கும் பூமர் அங்கிள்.. பாக்யாவை ஓவர் டேக் செய்யும் கோபி

Trending News