தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்த ஷாம் நடிப்பில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டடித்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க இருந்த தகவலை சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே சாக்லேட் பாய் நடிகராக இளம்பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வைத்திருந்த நடிகர்தான் ஷாம். பிரமாண்ட வெற்றிப் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் மினிமம் கேரண்டி நடிகராக வலம்வந்தார்.
ஷாமின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது இயற்கை. எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்றது. அதுமட்டுமில்லாமல் வசூலிலும் ஷாமுக்கு ஒரு நல்ல படமாகவே அமைந்தது.
சமீபத்தில் எஸ்பி ஜனநாதன் மரணமடைந்தார். எஸ்பி ஜனநாதன் கடைசியாக விஜய்சேதுபதி நடித்த லாபம் படத்தை இயக்கி வந்தார். லாபம் படத்தின் கடைசி கட்ட பணிகள் நடக்கும் போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அந்த படத்தை விஜய் சேதுபதி விரைவில் வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து ஷாம் நடிப்பில் இயற்கை 2 படத்தை தொடங்க இருந்தாராம் எஸ்பி ஜனநாதன். இதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இயற்கை படத்தின் இரண்டாம் பாகம் நார்வே அல்லது பிஜி நாட்டில் உருவாக இருந்ததாகவும், இதுபற்றி பேசி சில நாட்களிலேயே அவர் இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ஷாம். எஸ்பி ஜனநாதன் ஷாம் கூட்டணியில் உருவான இயற்கை படத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.