திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தாலி கட்டும்போது கண்கலங்கி ஷபானா.. செம்பருத்தியை கைப்பிடித்த செழியன்

சின்னத்திரை நட்சத்திரங்களான ஆரியன் மற்றும் ஷபானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் ஆரியன் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதைப்போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற சீரியலில் கதாநாயகியாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானா நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு இருக்க ஆரியன் மற்றும் ஷபானா இருவரும் அண்மையில் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தத்தின் போது மாற்றிக்கொண்ட மோதிரத்தில் புகைப்படம் எடுத்து அதனைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

அதன் பிறகு ஷபானாவிடம் எப்போது கல்யாணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். இதற்கு ஷபானா திருமணம் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லி விட்டு தான் செய்து கொள்வேன் என்று பதிலளித்தார்.

அவ்வாறு ஷபானா திருமணக்கோலத்தில் ரசிகர்களிடம் ஆசீர் பெறுவதாக கூறி, திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தை ரசிகர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ஷபானா க்யூட்டான பொம்மை போலவே அழகாக காட்சி அளிக்கிறார். விஜய்டிவி பிரபலங்களும், திரைப் பிரபலங்கள் ஒரு சிலரும் ஆரியன் மற்றும் ஷபானா உடைய திருமணத்தில் கலந்துகொண்டு புகைப்படத்தை எடுத்து அதனை வெளியிட்டு கொண்டிருக்கின்றனர்.

அதில் போன்றே தாலி கட்டும்போது ஷபானா கண்கலங்கி வீடியோவும் வைரலாக பரவிவருகிறது. மேலும் இவர்களுடைய திருமணத்திற்கு சோசியல் மீடியாவில் சின்னத்திரை ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

aryan-shobana
aryan-shobana

Trending News