புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விவாகரத்து பற்றி முதல் முறையாக வாயை திறந்த ஷபானா.. கண்ணியம் தவறிய நடத்தை என வேதனை

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அனைவரையும் கவர்ந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி. இந்த சீரியலில் பார்வதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷபானா. இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஷபானா தன் காதலர் ஆரியனை திருமணம் செய்து கொண்டார். ஆரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுடைய திருமணம் சின்னத்திரையை சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து நடிகை ஷபானா தனது சோஷியல் மீடியாவில் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் இவர்களுடைய திருமணம் திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஆகும்.

இவ்வளவு அவசரமாக எந்த முன்னறிவிப்புமின்றி திருமணத்தை ஏன் நடத்த வேண்டும் என்று ஷபானாவின் ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய திருமணத்திற்கு அவரது வீட்டினர் யாரும் வரவில்லை. மேலும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஷபானா இந்து மதத்தைச் சேர்ந்த ஆரியனை திருமணம் செய்து கொண்டதால் அவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் தரப்பில் இருந்து நிறைய எதிர்ப்பு இருந்தது.

இதனால் தான் இவர்களுடைய திருமணம் அவசரமாக நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தேனிலவுக்காக புதுச்சேரியில் ஒரு ரிசார்ட்டுக்கு சென்று இருந்தனர். ஆனால் அங்கு சென்ற மறுநாளே இவர்கள் இருவரும் திரும்பியது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இவர்களுடைய திருமணம் ஆரியன் வீட்டிற்கு பிடிக்காததால் அவருக்கு வேறு பெண் பார்த்து விட்டதாகவும் தகவல்கள் உலா வந்தது.

இதனால் திருமணமான சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் கிளம்பியது. தற்போது இந்த வதந்தி குறித்து ஷபானாவின் ரசிகர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஷபானா இதுபோன்ற வதந்திகளை நம்பும் ரசிகர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

என்னை பொருத்தவரை ஊடகங்கள் ஒரு சரியான மற்றும் உண்மையான தகவல்களை மக்களுக்கு கொடுப்பதில் கொஞ்சமாவது கண்ணியம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் விவாகரத்து பற்றி வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Trending News