திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

வெளியவே விடாமல் அட்லியை அமுக்கும் ஷாருக்கான்.. ராட்சச திமிங்கலத்துக்கு வீசும் வலை

Atlee-Shah rukh khan: பாலிவுட்டில் கால் பதித்த முதல் படமே அட்லிக்கு வேற லெவல் வெற்றியை கொடுத்துள்ளது. ஷாருக்கானை வைத்து அவர் இயக்கியிருந்த ஜவான் தற்போது 700 கோடியை தாண்டி வசூலித்த நிலையில் அதன் வெற்றி விழாவையும் படகுழுவினர் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

இது ஒரு புறம் இருந்தாலும் அட்லி மறுபடியும் தமிழ் பக்கம் வருவாரா இல்ல மும்பை பக்கமே கூடாரத்தை போட்டு விடுவாரா என்ற ஒரு ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனா அதுக்கு வாய்ப்பே இல்ல என்கிற மாதிரி ஷாருக்கான் இப்போது அவரை மொத்தமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டாராம்.

Also read: தப்ப தெளிவா பண்ணிட்டு வாயாலேயே வடை சுடாதீங்க.! அட்லிக்கு பதிலடி கொடுத்த விடாமுயற்சி மகிழ் திருமேனி

இது எதிர்பார்த்தது தான் என்றாலும் தற்போது அட்லியின் பார்வை கமல் பக்கம் திரும்பி உள்ளது தான் கொஞ்சம் ஜெர்க் ஆக இருக்கிறது. அதன்படி ஷாருக்கான், தம்பி மீண்டும் நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று அவரிடம் சொல்லி இருக்கிறார்.

உடனே குஷியான அட்லியும் உலக நாயகனை வளைத்து போடலாம் என்று ஐடியா கொடுத்திருக்கிறாராம். ஏனென்றால் கமல், ஷாருக்கானுக்கு நெருங்கிய நண்பர் என்று அனைவருக்கும் தெரியும். அதை வைத்து தான் அவர் இப்படி ஒரு பிட்டை போட்டு இருக்கிறார்.

Also read: அட்லி, ஷாருக்கான் கூட்டணி தேறியதா.? ஜவான் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

உடனே ஷாருக்கான் கமலிடம் இது பற்றி பேசி இருக்கிறார். ஆனால் ஆண்டவர் இப்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இருந்தாலும் இப்படி ஒரு கூட்டணி இணையுமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் ஏற்படத்தான் செய்கிறது.

இப்படியாக அட்லி ஹிந்தி பக்கம் பலமான அஸ்திவாரத்தை போட்டுள்ளதை ரசிகர்களும் வரவேற்கின்றனர். ஏனென்றால் அவர் மீண்டும் தமிழ் பக்கம் வந்து பழைய படங்களை காப்பியடித்து நம்மை சோதித்து விடுவாரோ என்ற பயம் தான். அந்த வகையில் இந்த விஷயம் இப்போது நமக்கெல்லாம் பெரும் ஆறுதலை கொடுத்திருக்கிறது.

Also read: ஷாருக்கான் பட்ட கஷ்டம் வீண் போகல.. அட்லி அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட 4வது நாள் வசூல்

Trending News