புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கணக்கு வழக்கை பார்த்து காண்டான ஷாருக்கான்.. பயத்தில் மாமியார் வீட்டுக்கு திரும்பி வந்த அட்லீ

இயக்குனர் அட்லீ சில மாதங்களுக்கு முன்பு செம குஷியில் இருந்தார். ஏனென்றால் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் வைத்து இயக்கும் ஜவான் படம் பல வருடங்கள் இழுத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. அதுமட்டுமின்றி திருமணமாகி 8 வருடங்களுக்கு பின்பு அட்லீயின் மனைவி பிரியா கருவுற்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இப்படி மிகுந்த சந்தோஷத்தில் இருந்த அட்லீக்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. அதாவது ஷாருக்கான் கிட்டதட்ட நான்கு வருடங்களாக எந்த படங்களிலும் ஹீரோவாக நடிக்காமல் இருந்த நிலையில் ஜவான் படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்று கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்து வந்தார்.

Also Read : அட்லீயை பல கோடி கொடுத்து தூக்க ரெடியான 3 தயாரிப்பாளர்கள்.. இவர அடிச்சா அவர் தானா வருவாரு என்ற நம்பிக்கையாம்

ஆனால் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. அதுமட்டுமின்றி பாலிவுட்டில் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் படுதோல்வி சந்தித்து வந்த நிலையில் ஷாருக்கான் ஹிந்தி சினிமாவை பதான் படத்தின் மூலம் தூக்கி நிறுத்தி உள்ளார்.

பதான் படத்தின் மூலம் உச்சகட்ட சந்தோஷத்தில் இருந்த ஷாருக்கான் எவ்வளவு செலவு செய்தாலும் கேட்க மாட்டார் என்ற தைரியத்தில் அட்லீ இஷ்டத்திற்கு செலவு செய்துள்ளார். என்னதான் ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் ஷாருக்கான் கணக்கு வழக்கை பார்க்கும் போது 15 கோடிக்கு மேல் அட்லீ தேவையில்லாமல் செலவு செய்தது தெரியவந்துள்ளது.

Also Read : குழந்தை பிறந்த கையோடு அடித்து நொறுக்கும் அட்லீ.. பதான் வசூலுக்கு வைத்த டார்கெட்

இதனால் ஷாருக்கான் அட்லீயை கூப்பிட்டு கொஞ்சம் கடுமையான வார்த்தைகளில் பேசி உள்ளார். ஷாருக்கான் இடமிருந்து இதை சற்றும் எதிர்பார்க்காத அட்லீ என்ன செய்வதென்று தெரியாமல் தனது மாமியார் வீடான சென்னைக்கு திரும்பி விட்டாராம். இதனால் ஜவான் படத்தின் நிலைமை என்ன என்று கேள்விக்குறியாகி உள்ளது.

ஷாருக்கான் திரும்பி கூப்பிட்டால் மும்பைக்கு போகலாம் என்ற முடிவில் அட்லீ இருக்கிறாராம். ஏனென்றால் இவ்வளவு செலவு செய்து விட்டு ஷாருக்கான் ஜவான் படத்தை அப்படியே விடமாட்டார். எப்படியும் அட்லீயை திரும்ப ஷாருக்கான் கூப்பிடுவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்துள்ளார்.

Also Read : மகிழ் திருமேனி படத்தின் காப்பி தான் விக்ரம் படமா.? அட்லி போல காப்பி கதையில் சிக்கிய லோகேஷ்

Trending News