திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்னேஷ் சிவனே பொறாமையில் பொங்கும் படி நயன்தாராவை கொஞ்சிய ஷாருக்கான்.. 5 பேருக்கு கிடைத்த செல்ல பெயர்

Jawan Movie: அட்லீ தமிழில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் முதல் முறையாக பாலிவுட்டில் ஜவான் படத்தை இயக்கி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் தமிழ் நட்சத்திரங்களான நயன்தாரா, விக்னேஷ் சிவன், யோகி பாபு, பிரியாமணி போன்ற பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இன்று ஜவான் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. இந்த சூழலில் ஷாருக்கான் ஜவான் படத்தில் உள்ள பிரபலங்களுக்கு அடைமொழி வைத்து கூப்பிட்டு உள்ளார்.

Also Read : நெல்சனை ஃபாலோ பண்ணும் அட்லீ.. விஜய்யால் அதிர்ந்த ஜவான் மேடை

அந்த வகையில் என்னென்ன பெயர் யாருக்கு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். முதலாவதாக ஜவான் படத்திற்கு இசையமைத்த அனிருத்தை பார்த்து என் மகன் போல் இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் ஜவான் படத்தில் செம மாஸ் ஆன பாடல்களை அனிருக் கொடுத்திருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக இந்த படத்திற்கு சோபி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

அவருக்கு ஆட்டம் போடு என்ற பட்டத்தை ஷாருக்கான் வழங்கி இருக்கிறார். மேலும் தமிழில் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் யோகி பாபு பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்திருக்கிறார். அவருக்கு கலகலப்பு என்று ஒத்த வார்த்தையில் பட்டம் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

Also Read : கைகலப்புடன் முடிந்த சந்திரமுகி 2 விழா.. லாரன்ஸ்சை போல் விழி பிதுங்கி நிற்கும் அட்லீ

மேலும் ஜவான் படத்தின் இயக்குனரான அட்லீக்கு மரண மாஸ் டைட்டில் ஷாருக்கானால் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகியான நயன்தாராவுக்கு கொடுத்திருக்கும் பட்டம் தான் விக்னேஷ் சிவனையே பொறாமைப்படும் அளவிற்கு வைத்திருக்கிறார்.

பார்த்தவுடன் எல்லோரையும் கவரும் திறன் உடைய நயன்தாராவுக்கு வசீகரம் என்ற பட்டத்தை ஷாருக்கான் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்திருக்கும் பட்டத்தில் எந்த தப்பும் இல்லை என நயன்தாரா ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இப்போது ரசிகர்கள் ஜவான் படத்தின் ரிலீஸுக்காக ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : வர வர வாய்ப்பு கம்மி ஆயிட்டே போகுது.. அடுத்த பிசினஸை தொடங்கிய நயன்தாரா

Trending News