செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அட்லீ மீது மன வருத்தத்தில் இருக்கும் ஷாருக்கான்.. காண்டாகி கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பல வருடங்களாக உருவாகி வரும் படம் ஜவான். நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். ஜவான் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.

ஷாருக்கான் அட்லீயை பற்றி பல மேடைகளில் பேசி உள்ளார். அதாவது அட்லீயை போன்ற ஒரு இயக்குனருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்ற தெரிவித்திருந்தார். இதுவரை இயக்குனர் அட்லீ மற்றும் ஷாருக்கான் இடையே சுமுகமான உறவு தான் இருந்து வந்தது.

Also Read : சரிந்து கிடக்கும் பாலிவுட்டை தூக்கி நிறுத்த போகும் பதான் பட டீசர்.. விஸ்வரூபம் எடுத்துள்ள ஷாருக்கான்!

இந்நிலையில் ஜவான் படம் முடியும் தருவாயில் உள்ளது. இப்போது ஷாருக்கானுக்கு அட்லீ மீது மன வருத்தம் உள்ளது. அதாவது இந்த படத்தை ஷாருக்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தான் தயாரித்து வருகிறார். சமீபகாலமாக பாலிவுட்டில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

ஷாருக்கான் தயாரித்த படங்களும் தோல்வியை தழுவியதால் அவருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் சிஜி வேலைகளை பார்த்ததால் ஓரளவு தற்போது லாபத்தில் உள்ளது. இந்த சமயத்தில் அட்லீ தேவையில்லாமல் அனாவசிய செலவு செய்து வருகிறாராம்.

Also Read : ரெண்டே படம் பாலிவுட்டிலே செட்டிலாகும் அட்லீ.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்

எது தேவை, எது தேவையில்லை என்று தெரியாமல் நிறைய செலவு செய்து தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அட்லீயிடம் தயாரிப்பு நிறுவனம் ஒரு கண்டிஷன் வைத்துள்ளதாம். அதாவது நீங்கள் படத்திற்கு எவ்வளவு வேணாலும் செலவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் செய்த செலவுக்கு எல்லாம் கணக்கு சரியாக வர வேண்டும் என்றும் அவையெல்லாம் திரையில் வரும் என கூறியுள்ளனர். இதனால் அட்லீ தற்போது கலக்கத்தில் உள்ளார். மேலும் இப்படியே செய்து வந்தால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வருவது கடினம் தான் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : அத்துமீறி ஆட்டம் போடும் விஜய் சேதுபதி.. வாலை ஒட்ட நறுக்கிய அட்லீ

Trending News