திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்.. காலனி-க்கு கூட தனி அறை ஷாருக்கானின் அசரவைக்கும் ஆடம்பர உலகம்

Shah Rukh Khan : பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியாவில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தமிழ் நாட்டில் எப்படி சூப்பர்ஸ்டார் இன்றளவும், இளம் நடிகர்களுக்கு போட்டியாக இருந்துவருகிறாரோ, அதே போல், ஹிந்தியில் ஷாருக் கான் இளம் நடிகர்களுக்கு, அசராமல் Tough கொடுத்து வருகிறார்.

அசால்ட்டாக 1000 கோடி வசூலை கொடுக்கும் ஷாருக்கான், 7,300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு அதிபதியாக உள்ளார். கடந்த வருடம் மட்டுமே, இரண்டு மெகா ஹிட்களை கொடுத்திருந்தார். தற்போது கிங் என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். தான் நடிக்கும் படங்களுக்கு ரூ. 170 முதல் ரூ. 250 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் ஷாருக்கான், இதனால் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், ஷாருக் கான் வசிக்கும் ஆடமபர மாளிகையில் இருக்கும் ஒரு சில அம்சங்கள், ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் தற்போது, அவர் மாளிகை பற்றிய தகவல்கள் இணையவாசிகள் கவனத்தை பெற்று வருகிறது.

ஷாருக்கான் சொத்து மதிப்பு

மும்பையில் 200 கோடி சொத்து மதிப்பில் ஒரு பிரம்மாண்ட பங்களாவில் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார் ஷாருக் கான். அந்த பங்களாவிற்கு, மன்னத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சொகுசு பங்களாவில் வீட்டின் இன்டீரியர் டிசைன் முழுவதையும் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தான் டிசைன் செய்துள்ளாராம்.

இந்த பங்களாவில்,ஷாருக்கான் பெறும் அனைத்து விருதுகளையும் அழகாய் வைப்பதற்காகவே தனி அறை அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தனது காலணிகள் அனைத்தையும் அடுக்கி வைப்பதற்காகவே ஒரு அழகிய அறை அமைக்கப்பட்டுள்ளதாம்.

மற்ற மொழி படங்களை பார்க்க ஆர்வம் காட்டுபவர் ஷாருக்கான். அதனால், பிறமொழி படங்களை பார்க்க வெல்வெட் சுவர்களால் ஆன பிரம்மாண்ட மினி தியேட்டரும் அமைக்கப்பட்டுள்ளதாம் மேலும் வீட்டின் படிக்கட்டுகள் மொத்தமும் மரத்தால் ஆனவை என்றும் கூறப்படுகிறது.

இதை பார்த்து, ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள், சினிமாவில் மரத்தை அழைக்காதீர்கள் என்று வசனம் பேசிவிட்டு, வெறும் படிக்கட்டு அமைக்க, மரங்களை அழித்திருக்கிறீர்களே? இது என்ன நியாயம் என்ற விமர்சனத்தானையும் முன்வைத்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பாலிவுட் பாஷா ஷாருக்கான்

Trending News