வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பதான் பட்ஜெட்டையே சம்பளமாக வாங்கிய ஷாருக்கான்.. பதறிப்போன அட்லி பட தயாரிப்பாளர்

ஷாருக்கான் பற்றி சமீபகாலமாக வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த பதான் ரிலீசுக்கு முன்பே ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது. அதிலும் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்த தீபிகா படுகோன் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தார்.

அது மட்டுமல்லாமல் அவர் அணிந்திருந்த காவி பிகினி உடையும் பல எதிர்ப்புகளை சம்பாதித்தது. அதனாலேயே அந்த படத்தை பார்க்க கூடாது என வெளிவந்த கருத்துக்களும் சோசியல் மீடியாவை ரணகளம் ஆக்கியது. ஆனால் பதான் திரைப்படம் அதையெல்லாம் முறியடித்து 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

Also read: முதலில் கஜானாவை மொத்தமாக காலி செய்த அட்லீ.. ஜவானுக்கு கல்லா கட்ட நாள் குறித்த ஷாருக்கான்

இதன் மூலம் சரிந்து கிடந்த பாலிவுட் திரையுலகையும் அப்படம் தூக்கி நிறுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் இப்போது நடித்து வரும் ஜவான் திரைப்படத்திற்கும் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் பதான் படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

அதாவது இப்படத்திற்காக போட்ட மொத்த பட்ஜெட்டையுமே அவர் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். அந்த வகையில் பதான் திரைப்படம் 225 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஷாருக்கானின் சம்பளம் மட்டுமே 200 கோடி ரூபாய். இதுவரை அவர் வாங்கிய சம்பளத்திலேயே இதுதான் அதிகபட்ச சம்பளம் ஆகும்.

Also read: பாலிவுட் போயும் வேலையை காட்டிய அட்லி.. ரஜினி ஸ்டைலில் சண்டை போட்ட ஷாருக்கான், லீக்கான காட்சிகள்

அந்த வகையில் ஷாருக்கான் பதான் படத்திற்கு முன்பு வரை 150 கோடி சம்பளம் தான் பெற்று வந்தார். ஆனால் தாறுமாறாக வசூல் வேட்டையாடிய இப்படத்தினால் மகிழ்ந்து போன தயாரிப்பாளர் அவருக்கு கேட்டதற்கும் மேலாகவே இவ்வளவு பெரிய தொகையை கொட்டிக் கொடுத்திருக்கிறார். இது பாலிவுட்டின் மற்ற கான் நடிகர்களை மட்டுமல்லாமல் ஜவான் பட தயாரிப்பாளரையும் கொஞ்சம் பதற தான் வைத்திருக்கிறது.

ஏனென்றால் அப்படத்திற்காக இதைவிட அதிகபட்ச சம்பளத்தை தான் ஷாருக்கான் கேட்டிருக்கிறாராம். ஆரம்பத்தில் 200 கோடிக்கு கீழ் சம்பளம் பேசப்பட்டிருந்தாலும் பதான் பட வெற்றி ஷாருக்கானின் மார்க்கெட்டை நிலை நிறுத்தி இருக்கிறது. அதனாலேயே அவர் இப்போது சம்பள விஷயத்தில் இவ்வளவு கெடுபிடி காட்டி வருகிறார். இதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர் தற்போது முழித்தபடி இருக்கிறாராம்.

Also read: அட்லீ மேல் விழுந்த மொத்த பழி.. பதான் செய்த வேலையால் டார்ச்சர் கொடுக்கும் ஷாருக்கான்!

Trending News