வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லோகேஷ் குழப்பத்திற்கு முடிவு கட்டிய ஷாருக்கான்.. இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை

Lokesh in Thalaivar 171: கமல், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஃபேவரிட் இயக்குனராக மாறிய லோகேஷ் அடுத்து ரஜினியை வைத்து தலைவர் 171 வது படத்தை இயக்கப் போகிறார். அந்த வகையில் லோகேஷின் ஹிட் லிஸ்டில் ரஜினி படமும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கவனமாக செய்து வருகிறார்.

முக்கியமாக தலைவர் 171 படத்தில் நடிக்கப் போகும் மற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ரொம்பவே மெனக்கீடு செய்கிறார். இதனால் இப்படத்தில் கேமியோ தோற்றத்தில் ஷாருக்கானை நடிக்க வைக்கலாம் என்று பிளான் பண்ணி வைத்திருந்தார். அது சம்பந்தமாக உடனே பேசி முடிவெடுத்து விடலாம் என்று மும்பைக்கு பறந்து இருக்கிறார்.

அங்க போய் ஷாருக்கானை சந்தித்து தலைவர் 171 படத்திற்கான ஒன் லைன் ஸ்டோரியை சொல்லி கேமியோ தோற்றத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஷாருக்கான் மறுப்பு தெரிவித்திருக்கிறார். எனக்கு கேமியோ கேரக்டர் எல்லாம் வேண்டாம். எனக்கென்று ஒரு கதையை ரெடி பண்ணுங்கள். அதில் நான் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: மொத்தமும் நான் செஞ்ச தப்பு.. லோகேஷ் வெளிப்படையா சொன்ன அதிர்ச்சி தகவல்

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் ஷாருக்கான் நடிக்க மறுத்ததற்கான காரணம் என்னவென்றால் அவர் சமீப காலமாக கேமியோ தோற்றங்களில் நடித்ததால் வெறுத்துப் போய்விட்டார். அந்த வகையில் பிரம்மாஸ்திரா, ராக்கெட்ரி மற்றும் டைகர் போன்ற படங்களுடன் நிறுத்திக்கிடலாம் என்று திட்டவட்டமாக ஷாருக்கான் முடிவு எடுத்து விட்டார்.

அத்துடன் சமீபத்தில் இவர் நடித்த பதான் மற்றும் ஜவான் படங்கள் வசூல் அளவில் பட்டையை கிளப்பியதால் மறுபடியும் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் தான் போற போக்கில் லோகேஷ்க்கும் ஒரு கொக்கி போட்டு இருக்கிறார். எனக்கான ஒரு கதையை ரெடி பண்ணுங்கள் என்று சொன்னதற்கான காரணம் விக்ரம், லியோ போன்ற படங்களின் தாக்கம் தான் அவருக்கு மிகப்பெரிய ஆசையை தூண்டி இருக்கிறது.

இதனை அடுத்து லோகேஷ், தலைவர் 171 படத்தில் ஷாருக்கான் நடிப்பார் என்று எதிர்பார்ப்பை வைத்து இருந்தார். ஆனால் ஷாருக்கான் தலைவர் படத்திற்கு நோ சொல்லிவிட்டார். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக வேற எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இனி ஒவ்வொரு கேரக்டருக்கும் ஆர்டிஸ்ட்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் மும்மரமாக களமிறங்க போகிறார்.

Also read: லியோவில் வந்து சிக்கிய ஏழரை, துரத்திவிட்ட ரஜினி.. அசராமல் கழட்டிவிட்டு லோகேஷ்

Trending News