வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஏழுமலையானை வைத்து விளம்பரம் தேடிய ஷாருக்கான்.. கருவறைக்குள் பாய்ந்த பணம், வெடித்த சர்ச்சை

Shah Rukh Khan: பணம் பாதாளம் மட்டும் பாயும் அப்படின்னு சும்மாவா சொன்னாங்க. அப்படித்தான் இப்ப ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதாவது திருப்பதிக்கு சாமி கும்பிட போன ஷாருக்கான் ஏழுமலையானை வைத்து விளம்பரம் தேடிவிட்டார் என்ற ஒரு சர்ச்சை இப்ப பூதாகரமா வெடிச்சிருக்கு.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஜவான் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான பிரமோஷன் வேலைகள் அனைத்தும் தற்போது படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட சென்னையில் இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Also read: மொட்ட மண்டையுடன் ஜவான் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்.. அட்லி கேரியருக்கு நாள் குறிச்சாச்சு!

அதைத்தொடர்ந்து தற்போது ஷாருக்கான் மற்றும் நயன்தாரா குடும்பத்தினர் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். இசை வெளியீட்டு விழாவுக்கு வராத நயன்தாரா இப்போது ஷாருக்கானுக்காக திருப்பதிக்கு வந்திருக்கிறார். இது ஒரு புறம் இருக்க ஷாருக்கான் தரிசனத்திற்கு பட்டு சட்டை, அங்கவஸ்திரம் என்று கலக்கலாக வந்தது தான் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இன்னொரு விஷயமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது இந்த இரண்டு குடும்பங்களும் அதிகாலை சுப்ரபாத பூஜையில் கலந்து கொண்டனர். மேலும் ஷாருக்கான் கருவறை வரைக்கும் சென்று இருக்கிறார். பொதுவாக திருப்பதி கோவில் நிர்வாகம் இஸ்லாமியர்களை அங்கு அனுமதிப்பதில்லை.

Also read: கமல், ரஜினியை எல்லாம் ஓவர் டேக் செய்த ஷாருக்கான்.. மெய்சிலிர்க்க வைத்த கிங் ஆப் பாலிவுட்

அப்படி இருக்கும் போது ஷாருக்கான் கருவறை வரை சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரித்து பார்த்ததில் அவர் அதற்காக நிறைய பணத்தை கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. அதனாலேயே கோவில் நிர்வாகம் அவரை அனுமதித்ததாகவும் பேசப்பட்டு வருகிறது.

இதை தற்போது கடுமையாக விமர்சித்து வரும் ரசிகர்கள் ஒரு சாமானிய இஸ்லாமியர் இது போல் ஏழுமலையானை தரிசித்து விட முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். அப்படி என்றால் சாதாரண இஸ்லாமியர்களை இனிமேல் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற போர் கொடியையும் அவர்கள் தூக்கி உள்ளனர்.

Also read: விக்னேஷ் சிவனே பொறாமையில் பொங்கும் படி நயன்தாராவை கொஞ்சிய ஷாருக்கான்.. 5 பேருக்கு கிடைத்த செல்ல பெயர்

இதற்கு கோவில் நிர்வாகம் என்ன பதிலளிக்க போகிறது என்று தெரியவில்லை. ஆனால் இது ஜவான் படத்திற்கு ஒரு பிரமோஷன் ஆக மாறிவிட்டது என்பது மட்டும் உண்மை. இப்படி பணத்தை கொடுத்து கருவறை வரை சென்று பிரச்சனைக்கு வித்திட்ட ஷாருக்கான் ஏழுமலையானை வைத்து தன் படத்திற்கு விளம்பரம் தேடி இருக்கிறார்.

Trending News