மூட்டை முடிச்சை கட்டிய அட்லீ.. ஷாருக்கான் விட்ட டோஸால் ஜவானுக்கு ஏற்பட்ட விடிவுகாலம்

Director Atlee: ஜவான் படத்தை கடந்த ஐந்து வருடங்களாக உருட்டிக் கொண்டிருக்கிறார் அட்லீ. கோவிட் தொற்றுக்கு முன்பே தொடங்கப்பட்ட இப்படம் சில காரணங்களினால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதோடு மட்டுமில்லாமல் அட்லீயும் இந்த படத்தை இழுத்தடித்துக் கொண்டு சென்றிருந்தார்.

மேலும் இதற்காக அட்லீ தனது மனைவி பிரியா அட்லீயுடன் மும்பையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக ஷாருக்கான் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இந்த வருடம் பதான் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

Also Read : கோலிவுட் பெரிதும் எதிர்பார்க்கும் மற்ற மொழி 5 படங்கள்.. பல வருடமாக இழுத்தடிக்கும் அட்லீ

இதே சூட்டுடன் ஜவான் படத்தையும் வெளியிட்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட வேண்டும் என ஷாருக்கான் நினைத்திருந்தார். ஆனால் அட்லீத் தொடர்ந்து ஜவான் படத்தை இழுத்தடித்துக் கொண்டிருந்ததால் ஷாருக்கான் கடுப்பில் ஒரு டோஸும் விட்டிருக்கிறார். இதனால் அட்லீ விறுவிறுப்பாக வேலையை தொடங்கி உள்ளாராம்.

அதன்படி வருகின்ற ஜூலை ஏழாம் தேதி ஜவான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஒருவழியாக ட்ரெய்லர் ரிலீஸ் ஆனவுடன் சட்டு புட்டு என்று படத்தையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Also Read : இது என்னடா ஷாருக்கானுக்கு வந்த சோதனை.. அட்லீயால் அரசனை நம்பி ஆண்டியான பரிதாபம்

இதனால் சீக்கிரமே மும்பைக்கு அட்லீ குட் பை சொல்லிவிட்டு தனது மூட்டை முடிச்சை எல்லாம் கட்டிக்கிட்டு சென்னை புறப்பட இருக்கிறார். மேலும் ஜவான் வெற்றியை பொறுத்தே அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் வாய்ப்பு அவரை தேடி வர இருக்கிறது. அடுத்ததாக விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தளபதி 68 படம் வெங்கட் பிரபுவின் கைவசம் சென்று விட்டது. இதனால் உச்ச நட்சத்திரத்தின் படத்தை அட்லீ இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஜவான் படம் விரைவில் ரிலீஸாக உள்ள செய்தி ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : நெல்சன், அட்லீயை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய லோகேஷ்.. லியோ படத்தின் போஸ்டர் காப்பியா?