வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலிவுட்டை மீட்டெடுக்க வரும் ஷாருக்கானின் பதான்.. பல கோடியில் நடந்த முன்பதிவு கலெக்ஷன்

சமீபகாலமாக பாலிவுட்டில் பெரிய நடிகர்களின் படங்கள் படுதோல்வி அடைந்து வருகிறது. அதுவும் படம் வெளியாவதற்கு முன்னதாகவே டாப் நடிகர்களின் படங்களை ரசிகர்கள் பாய்காட் செய்து வருகிறார்கள். ஏனென்றால் பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தலை தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள பதான் படத்தில் நடித்துள்ளார். இது தவிர அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Also Read : ஷாருக்கானுக்காக விஜய் வெளியிட்ட பதான் பட ட்ரெய்லர்.. பாலிவுட் மலைபோல் நம்பி இருக்கும் படம் ஜெயிக்குமா?

ஏனென்றால் சில ஆண்டுகளாக ஷாருக்கானின் எந்த படமும் வெளியாகவில்லை. மேலும் பதான் படம் தொடங்கியதிலிருந்து ஷாருக்கான் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்நிலையில் பதான் படத்தில் தீபிகா படுகோன், டிம்பிள் கபோடியா, ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியானது.

தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆடை மிகவும் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. மேலும் சமீபத்தில் தளபதி விஜய் பதான் படத்தின் தமிழ் பதிப்புக்கான ட்ரெய்லரை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இப்போது பதான் படத்தின் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Also Read : ஷாருக்கான் மகளை வளைத்துப் போட்ட சூப்பர் ஸ்டாரின் மகன்.. பின்னணியில் இருக்கும் காரணம்

பதான் படத்திற்கான டிக்கெட் விலை கிட்டத்தட்ட 2200 வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளான இன்று நள்ளிரவுக்குள் 10 கோடி வரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ரிலீசுக்கு முன்பே பதான் படம் பல கோடி கலெக்ஷனை அள்ள உள்ளது.

மேலும் பதான் படம் பாலிவுட்டில் வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும். இதன் மூலம் ஷாருக்கான் பாலிவுட் சினிமாவை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது. பதான் படத்திற்காக பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா மொழி ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : ஷாருக்கான் கேட்டால் லிமிட்டே கிடையாது.. நன்றியை வேற லெவலில் காட்டும் திருமணம் முடிந்த தீபிகா

Trending News