வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நடிக்கும் ஆசையே இல்லை.. எல்லாம் ஷாருக்கான் படுத்திய பாடு

பாலிவுட் நடிகை கஜோல், இவர், ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘குச் குச் ஹோதா ஹை’, மற்றும் ‘கபி குஷி கபி கம்’ போன்ற கிளாசிக் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். முதன் முதலில் தமிழில், மின்சார கனவு படத்தில் நடித்ததில் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி -2 படத்தில் நடிந்திருந்தார். தமிழில் இரண்டு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்தி மொழியில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

ஆனால் சமீபகாலமாக சொற்பமான சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமூக வலைத்தளப் பக்கங்களில் அவ்வப்போது மட்டுமே பதிவிடுவார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.

எனக்கு நடிக்கவே விருப்பம் இல்லை.. ஷாருகான் தான் காரணம்

இந்த நிலையில், இவ்வளவு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும், கஜோல் க்கு சினிமாவில் நடிக்க ஆசையே இல்லையாம். அவர் அவருடைய 18-ஆவது வயதிலேயே, நடிப்பை விட்டு விலக முடிவெடுத்துள்ளார். இனி சினிமா பக்கம் தலைவைத்து கூட படுக்க கூடாது என்று கருத்னாராம்.

இப்படி இருக்க, கஜோல் பேட்டியில் சொன்ன இந்த விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறியதாவது, “பல வருடங்களுக்கு முன்பு நான் ‘உதார் கி ஜிந்தகி’ என்ற படத்தில் நடித்திருந்தேன். அப்படம் எனது 3-வது படம் என நினைக்கிறேன். அப்போது எனக்கு 17 அல்லது 18 வயது இருக்கும். இப்படத்திற்கு முன்பு நடிப்பை விட்டு விலக நினைத்தேன்.”

“அப்போதுதான் ஷாருக்கான் என்னிடம் ‘எப்படி நடிக்க வேண்டும் என்று உனக்கு தெரியும் நீ கற்றுக்கொள்வாய்’ என்றார். இது என்னை தொடர்ந்து நடிக்க தூண்டியது’ என்றார். கஜோல் தொடர்ந்து நடிக்க ஷாருக்கான் தான் என்று இவர் தெரிவித்தது தற்போது வைரலாகி வருகிறது.

Trending News