சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

அங்கேயும் காப்பியா அட்லி.? ஜவான் ஃபர்ஸ்ட் லுக் இந்தப்படத்தின் ஜெராக்ஸ்

அட்லி முதல்முறையாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு, முன்று வருடங்களாக நடந்து வருகிறது. இதற்காக அட்லி மும்பையில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கியுள்ளார்.

முதலில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதன்பின்பு ஷாருக்கான் மகன் சில சர்ச்சையில் சிக்கியதால் ஷாருக்கானால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பெயர் மற்றும் ரிலீஸ் தேதி ஒரு வீடியோவுடன் வெளியானது. அதாவது இப்படத்திற்கு ஜவான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஷாருக்கானின் கெட்டப் தெரியவந்துள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானின் கெட்டப் ஹாலிவுட்டில் 1990 ஆம் ஆண்டு வெளியான டார்க் மேன் என்ற படத்தின் கெட்டப்பை அட்லி ஜவான் படத்தில் காப்பி அடித்து உள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்தப் படத்தைப் போலவே இப்படத்திலும் ஷாருக்கானுக்கு முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றியபடி கெட்டப்பை போட்ட காப்பி அடித்துள்ளார் அட்லி.

ஒரு டைட்டில் வீடியோ வெளியான நிலையிலேயே அட்லியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் ட்ரெய்லர் மற்றும் படம் வெளியானால் என்னென்ன செய்யப் போகிறார்களோ. மேலும் கோலிவுட்டில் தான் அட்லி படங்களை காப்பி அடிக்கிறார் என்றால் அதே வேலையை பாலிவுட்டிலும் செய்கிறார் என சில ரசிகர்கள் அட்லியை விமர்சித்து வருகிறார்கள்.

Trending News