யார் அந்த தமிழக வீரர்.? 2021 ஐபிஎல்லில் அனைவரின் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் அதிரடி ஆட்டக்காரர்!

2021-ipl
2021-ipl

2021 ஐபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக திட்டமிட்டு இந்த தொடர் நடத்தப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தொடரில் இறுதிப்போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி தமிழக அணி கோப்பையை வென்றுள்ளது. இளம் வீரர்கள் பலர் தங்களது திறமையை நிரூபித்து 2021 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக ஆடி வரும் ஷாருக்கான் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடி இவர் வெற்றி தேடி தந்துள்ளார். தான் சந்திக்கும் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆடி வருகிறார். கடைசி வரை நிலைத்து நின்று ஆடி போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கிறார்.

Sharukh-khan-Cinemapettai.jpg
Sharukh-khan-Cinemapettai.jpg

ஷாருக்கான் ஆறாவது மற்றும் ஏழாவது பேட்ஸ்மேனாக இறங்கினாலும் சரி, மிடில் ஆர்டரில் இறங்கினாலும் சரி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். தற்போது இந்திய டி 20 அணியில் மிடில் ஆர்டர் வலிமையாக இல்லாத நிலையில் ஷாருக்கான் அதை நிரப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Sharukh-khan-Cinemapettai-1.jpg
Sharukh-khan-Cinemapettai-1.jpg

டிஎன்பிஎல் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஷாருக்கான் தற்போது ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெறுவார் என்று கூறப்படுகிறது. இரண்டு சீசனாக சையது முஷ்டாக் கோப்பையில் நன்றாக ஆடினாலும் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த முறை இவர் ஏலம் எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Advertisement Amazon Prime Banner