சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

முதல் முறையாக ஜவான் படத்தை பற்றி பேசிய ஷாருக்கான்.. என்ன அட்லி இப்படி சொல்லிட்டாரு?

ஷாருக் கான் தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்க்கு தொடர் வெற்றி படத்தை கொடுத்த அட்லி ஜவான் படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 2,3 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்று வந்தது. மேலும் ஜவான் படத்தில் கோலிவுட்டை சார்ந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ப்ரியாமணி, யோகி பாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

மேலும் ஷாருக்கான் இப்படத்தில் இரட்டை வேடத்தில் அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லன் நடிக்கும் ஷாருக்கானுக்கு தான் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடந்த விக்னேஷ் சிவன், நயன்தாராவின் திருமணத்தில் ஷாருக்கான் பங்கு பெற்றார்.

இந்நிலையில் முதல்முறையாக ஜவான் படத்தை பற்றியும், அட்லியைப் பற்றியும் ஷாருக்கான் பேசியுள்ளார். அதாவது அட்லியின் அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருடைய படங்கள் மாஸ் கமர்ஷியல் படங்களாக இருக்கும். இது போன்ற படங்களில் இதுவரை நான் நடித்ததில்லை.

இதனால் முதல் முறையாக இதுபோன்ற மாஸ் கமர்சியல் படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். மேலும் ஒரு நடிகனாக ஜவான் படத்தில் நடிப்பதில் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என ஷாருக்கான் கூறியுள்ளார்.

ஜவான் படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளான போதும் ஷாருக்கான் அட்லியை பற்றி இவ்வாறு புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரே தன்னை இப்படி பாராட்டி பேசியுள்ளார் என்ற மகிழ்ச்சியில் அட்லி உள்ளாராம்.

Trending News