செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

எதிர்பார்ப்பை மீறி பல கோடிகளை அள்ளிய சைத்தான்.. முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

Shaithaan : நேற்றைய தினம் பாலிவுட்டில் வெளியான சைத்தான் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வரவேற்பு கொடுத்தார்கள். மாதவன் இதுவரை நடித்திடாத ஒரு புதிய கோணத்தில் சைக்கோ வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார். அவருக்கு ஈடு கொடுக்கும்படி பாலிவுட் ஸ்டார் அஜய் தேவ்கன் பட்டையை கிளப்பி இருந்தார்.

அதேபோல் பல வருடம் கழித்து பாலிவுட்டில் ஜோதிகாவின் என்ட்ரி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது. செம திரில்லர் படமாக சைத்தான் உருவாகி இருந்த நிலையில் ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. எதிர்பாராத ஒவ்வொரு திருப்பங்கள், கிளைமாக்ஸ் காட்சி பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் 10 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாளே கிட்டதட்ட 15.21 கோடி வசூல் செய்து உள்ளது. அதோடு நேற்று படத்திற்கு பாசிடிவ் விமானங்கள் தொடர்ந்து கிடைத்து வந்ததால் உடனடியாகவே டிக்கெட்டுகள் அனைத்துமே விற்பனையாகி விட்டது.

Also Read : சூனியம் வச்சே 100 கோடி கிளப்பில் இணைய உள்ள மாதவனின் சைத்தான்.. முதல் நாள் கலெக்ஷன் இவ்வளவா?

ஆகையால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் எதிர்பார்ப்பை மீறி இன்னும் அதிக வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. பிரம்மாண்டமாக ப்ரமோஷன் செய்த பல படங்கள் இப்போது எதிர்பார்த்த அளவு இல்லாமல் நெகடிவ் விமர்சனத்தை பெற்று வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சைத்தான் படம் ஆர்ப்பாட்டமே இல்லாமல் வந்து வரவேற்பை பெற்றிருக்கிறது. அதோடு மிக விரைவில் இப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்பதில் இந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவுக்கு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

Also Read : Shaitaan Movie Review- சைத்தான் விமர்சனம்! ஜோதிகாவை ஆட்டிப்படைக்கும் சைக்கோ மாதவன்

Advertisement Amazon Prime Banner

Trending News