புதன்கிழமை, ஜனவரி 15, 2025

10 நாளில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சைத்தான்.. நடுங்க வைத்த மாதவனின் கொடூரம்

Shaitaan movie box office collection in world wide after 10 days of release: மகளிர் தினத்தை ஒட்டி மார்ச் 8 அன்று வெளியான அஜய்தேவ்கனின் சைத்தான் நேர்மறையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வசூலில் சாதனை படைத்து வருகிறது. 

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அஜய் தேவகன் உடன் மாதவன், ஜோதிகா,  ஜான்வி மற்றும் குழந்தை நட்சத்திரம் அன்கட்ராஜ் ஆகியோர் இணைந்துள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு பாலிவுட்டில் கம்பேக் கொடுத்துள்ளார் ஜோதிகா. 

ஹாரர் திரில்லர் மூவி ஆன இத்திரைக்கதையில் வழக்கமான பேய் மசாலாவை கலக்காமல் ரசிகர்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில் பழங்காலத்து கதையில் வருவது போல் பில்லி சூனியம் செய்து சூனியக்கார தத்துவத்தை அரங்கேற்றி இருந்தனர். 

சைத்தானாக மிரட்டிய மாதவன், அவனிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றும் அஜய் தேவகன் இவர்களை சுற்றி பின்னப்பட்ட இக்கதையில் சுவாரசியங்களுக்கு குறைவில்லாமல் பார்வையாளர்களை இருக்கை நுனி வரை அழைத்துச் சென்று அதகளப்படுத்தி இருந்தார் இயக்குனர் விகாஸ். 

“ஒரு லட்டு கொடுத்து, உன் மகளே எனக்கு கொடு” என்று கூறுவது கொடூரத்தின் உச்சம். முன்பின் அறியாதவர் போடும் கட்டளைக்கு குடும்பமே ஆட வேண்டும் என்று  நினைக்கும் மாதவனின் குரூரம் நாடி நரம்புகளை நடுங்க வைத்தது. 

ஜியோ ஸ்டூடியோஸ், தேவ்கன் பிலிம்ஸ், பனாராமா ஸ்டூடியோஸ் இவர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது சைத்தான்

குஜராத்தி மொழியில் 2023இல் வெளிவந்த வாஷ் திரைப்படத்தின் ரீமேக்கே சைத்தான். ட்ரெய்லரிலேயே திகிலூட்டிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலிருந்து வசூலில் ஏறுமுகத்தை தந்தது. 

2024இல் 100 கோடியை தாண்டிய 3வது திரைப்படம் சைத்தான்

கடந்த ஞாயிறு அன்று மட்டுமே ஒரே நாளில் 10 கோடியை வசூலித்துள்ளது. வெளியான பத்து நாட்களில், இந்திய அளவில் 106  கோடியை கிராஸ் செய்த இத்திரைப்படம், உலக அளவில் 150 கோடியை தாண்டி விறுவிறுவென முன்னேறி வருகிறது. 

2024 வெளிவந்த திரைப்படங்களிலேயே 100 கோடியை தாண்டிய மூணாவது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது சைத்தான்.

வழக்கமான ஹாரர் திரைப்படம் தான் என்று  கடந்து போய்விட முடியாமல் காலத்திற்கும் பேசும் வகையில் திரில்லிங் அனுபவத்தை தந்து விட்டுப் போகிறது இந்த சைத்தான்.

Trending News