வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Shaitaan Movie Review- சைத்தான் விமர்சனம்! ஜோதிகாவை ஆட்டிப்படைக்கும் சைக்கோ மாதவன்

Shaitaan Movie Review : பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சைத்தான் படம் இப்போது மிகுந்த வரவேற்புடன் வெளியாகி இருக்கிறது. அஜய் தேவ்கன் கபீர் என்ற கதாபாத்திரத்தில் மனைவி, மகன், மகள் என நான்கு பேர் கொண்ட குடும்பமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மனைவியாக நேஹா என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா, மகளாக ஜான்வி கதாபாத்திரத்தில் ஜான்கி போடிவாலா மற்றும் மகனாக துருவ் என்ற கதாபாத்திரத்தில் அங்கத் ராஜ் நடித்துள்ளனர்.

அஜய் தேவ்கன் தனது குடும்பத்துடன் பண்ணை வீட்டிற்கு செல்லும் வழியில் வனராஜ் அதாவது மாதவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. அப்போது மிகவும் எதார்த்தமாக பழகக் கூடிய மனிதனாக இருக்கும்படியாக அவர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார் மாதவன். அந்தச் சமயத்தில் எல்லோரும் ஒன்றாக தேநீர் கடையில் சாப்பிடும் போது ஜான்விக்கு விஷ லட்டை கொடுத்து விடுகிறார் மாதவன்.

அதை ஜான்வி சாப்பிடும் போது மாதவன் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்ய வைக்கிறது. அஜய் தேவ்கன் பண்ணை வீட்டிற்கு குடும்பத்துடன் செல்லும்போது மாதவனும் பின்தொடர்ந்து செல்கிறார். அதன் பிறகு அவர்களின் வீட்டிற்குள் நுழைந்த மாதவன் ஜான்வியை வைத்து அஜய் தேவகனின் குடும்பத்தை ஆட்டி படைக்கிறார்.

Also Read : சூனியக்கார சைக்கோவாக மிரட்டும் மாதவன்.. ஜோதிகாவின் ஈர கொல நடுங்க வைக்கும் ஷைத்தான் ட்ரெய்லர்

மாதவன் பேச்சுக்கு இணங்க தனது மகள் மனநோயாளியாக செய்வதை பார்த்து அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா இருவரும் கலங்கி போகின்றனர். மேலும் மாதவன் பிடியிலிருந்து தனது குடும்பத்தை அஜய் காப்பாற்றுகிறாரா என்பது தான் சைத்தான் படத்தின் கிளைமாக்ஸ். படத்திற்கு பிளஸ் மாதவனின் சைக்கோ வில்லன் கதாபாத்திரம்தான்.

கண்டிப்பாக அவருக்கு சிறந்த வில்லனுக்கான விருது இந்த ஆண்டு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அஜய் தேவ்கனும் தனது சிறந்த நடிப்பை கொடுத்துள்ள நிலையில் அவரது மகளாக நடித்த ஜான்கி போடிவாலா அசாத்தியமான நடிப்பை கொடுத்துள்ளார். அதேபோல் ஜோதிகா தனது உணர்ச்சி பூர்வமான அம்மா கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி உள்ளார்.

அதோடு திரில்லர் படம் என்பதால் படத்திற்கான பிஜிஎம் பக்காவாக அமைந்திருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரச் செய்துள்ளது. படத்திற்கு மைனஸ் என்றால் இடைவெளியில் சற்று கதை இழுத்து அடிப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தி இருந்தது. மற்றபடி சைத்தான் தியேட்டரையே உரைய செய்துள்ளது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.75/5

Trending News