வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஷகிலா பயோபிக்கில் நடிக்கும் அஜித் பட நாயகி.. யாம்மாடியோ! ஜாடிக்கேத்த மூடி தான்

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் ஷகிலா. இவரது பெயரை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர். இவர் ஒரு படத்தில் ஐந்து நிமிடம் தோன்றினால் கூட போதும் அந்த படம் ஹிட்டாகும். அந்த அளவிற்கு ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர்.

அதுமட்டுமின்றி ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இவர் படங்கள் வரவேற்பைப் பெற்றன.

ஆனால் ஒரு கட்டத்தில் அந்த படங்களில் இருந்து விலகி நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கவர்ச்சி நாயகியாக அறியப்பட்டு பல லட்சங்கள் சம்பாதித்தாலும், அதையெல்லாம் உறவினர்களிடம் நண்பர்களிடமும் பறிகொடுத்துவிட்டு இப்போது சாதாரண வாழ்க்கையைதான் வாழ்ந்து வருகிறார்.

விஜய் டிவியில் சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் ஷகிலா. இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஷகிலா மீது இருந்த கவர்ச்சி நடிகை என்ற பார்வை விலகி அவர் மீது தனி மரியாதை ரசிகர்களுக்கு உருவானது.

valimai-actress-Huma Qureshi-cinemapettai
valimai-actress-Huma Qureshi-cinemapettai

இந்நிலையில் அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து ஹிந்தியில் ஒரு படம் ஏற்கனவே உருவாகி வருகிறது. ஆனால் இப்போது தமிழில் ஷகீலாவே தன்னுடைய பயோபிக்கை எடுக்க உள்ளாராம். அந்த படத்தில் வலிமை பட நாயகி ஹூமா குரேஷியை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News