மலையாளத்திலும் தமிழிலும் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் ஷகிலா. உடல் அழகை காட்டி தன் வசப்படுத்துவதில் திறமை கொண்டவர் என்றே கூறலாம்.
மலையாளத்தில் பல படங்களில் நடித்து கொடிகட்டி பறந்த காலங்களும் உண்டு. எப்படி இது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன் என்று பல பேட்டிகளில் புலம்பித் தள்ளி உள்ளார்.
ஏனென்றால் தனது குடும்பத்தில் இருக்கும் உடன்பிறப்புகளை கரை சேர்ப்பதற்காக இந்த மாதிரி பிட்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகவும். இது போன்ற படங்களில் நடிப்பதற்காக மலையாள சினிமா ரெக்கார்டு கொடுத்தனர்.

இதனால் அவரிடம் இருந்த அனைத்து பட வாய்ப்புகளும் கை நழுவியது. இது ஒருபுறமிருக்க இப்போது தன்னுடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இவர் எப்படி பாதிக்கப்பட்டார், எதனால் பிட்டு படங்களில் நடிக்க வந்தார், எப்படி இந்த சமுதாயத்தில் கவர்ச்சியை மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது போன்று கதையை உருவாக்கி வைத்து இருப்பதாகவும், அதனை தானே தயாரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஷகிலாவாக ஹூமா குரேஷி நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே 2020ஆம் ஆண்டு ஷகிலா என்ற படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் சமீபத்தில் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி கலந்துகொண்டு தான் இத்தனை நாளாக திரைக்குப் பின்னால் இருந்த கேவலமான ஒரு பிம்பத்தை துடைத்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
அந்த அளவிற்கு அவரின் இயல்பான பேச்சு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தவிர தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.