வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பிரம்மாண்ட கூட்டணியில் 10 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி.. மரண வெயிட்டிங்!

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை ஷாலினி. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை படம் மூலம் அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஷாலினி அமர்க்களம் படத்தில் முதல் முறையாக நடிகர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்டு செட்டிலான ஷாலினி குடும்பம் குழந்தை என சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

திருமணத்திற்குப் பின்னர் தற்போதுவரை ஷாலினி எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் ஷாலினி பிரமாண்ட படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி ஒரு கௌரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அஜித் மற்றும் ஷாலினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் ரீ என்ட்ரி கொடுப்பது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் ரீ என்ட்ரி கொடுக்கும் அனைத்து நடிகைகளும் சினிமாவில் நீடித்து இருப்பதில்லை. சமந்தா, ஜோதிகா, நஸ்ரியா போன்ற ஒரு சில நடிகைகள் மட்டுமே நிலைத்து வருகின்றனர். அந்த வரிசையில் ஷாலினியும் இடம் பெறுவாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

ajith-shalini
ajith-shalini

Trending News