வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கணவனால் அனுபவித்த நரக வேதனை.. விவாகரத்தை போட்டோ ஷூட் எடுத்த காரணத்தை கூறிய ஷாலினி

இப்போது பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை போட்டோ ஷூட் மோகத்தில் சிக்கி உள்ளனர். பொதுவாக திருமணத்திற்கு தான் போட்டோ ஷூட் எடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது எதுக்கெடுத்தாலும் போட்டோ ஷூட் எடுத்த தங்களது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் சின்னத்திரை நடிகையான ஷாலினி தனக்கு விவாகரத்தான செய்தியை போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. ஷாலினிக்கு விவாகரத்தான செய்தி அதிர்ச்சி தருவதை விட, இதை கூட போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவார்களா என ரசிகர்கள் கழுவி ஊற்றி வந்தனர்.

Also Read : ஒரே ஹீரோயினை காதலிக்கும் அண்ணன் தம்பி கதையில் உருவான 5 படங்கள்.. தம்பியை கொல்ல துணிந்த அஜித்

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் விவாகரத்து போட்டோ ஷூட் எடுத்ததற்கான காரணத்தை ஷாலினி கூறியுள்ளார். அதாவது ஷாலினி பள்ளி படிப்பை மட்டுமே முடித்து இருந்தாராம். குடும்பத்தின் கட்டாயத்தின் பேரில் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அந்த திருமணம் சில மாதங்கள் தான் நீடித்ததாம்.

அதன் பிறகு டான்ஸ் நிகழ்ச்சிக்காக ஷாலினி துபாய் சென்றிருந்தாராம். அங்கு இவரது ரசிகர் என ஷாலினிக்கு அறிமுகமாகியுள்ளார் ரியாஸ். மேலும் சில காலம் இவர்கள் நண்பர்களாகவே பயணிக்க அதன் பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் ரியாஸ் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

Also Read : பிரம்மாண்டமாக நடந்த 8-வது விஜய் டிவி அவார்டு நிகழ்ச்சி.. ரெண்டு முறை விருதை தட்டிச் சென்ற ஒரே சீரியல்

மேலும் சில நாட்களிலேயே ரியாஸ் என்பவரால் ஷாலினி பல துன்பங்களை அனுபவித்துள்ளார். ஆனால் குழந்தை பிறந்தால் இது எல்லாம் சரியாகிவிடும் என பொறுத்துக் கொண்டிருந்தாராம். அதுமட்டுமின்றி பலமுறை தன்னை ரியாஸ் அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த பேட்டியில் ஷாலினி கதறி அழுதார்.

மேலும் சினிமாவில் உள்ளதால் யாரிடமும் பேசக்கூடாது என பல கண்டிஷன்களும் ரியாஸ் போட்டுள்ளாராம். வெறுத்துப் போய் தான் விவாகரத்து பெற்றதாகவும், தன்னைப் போல பல பெண்கள் இது போன்ற துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். அவர்களும் சுதந்திரமாக என்னை போல் வெளியே வர வேண்டும் என்று ஷாலினி கூறியுள்ளார்.

Also Read : குணசேகரனை ஓவர்டேக் செய்யும் ஜனனி.. ரேணுகா கதிருக்கு கொடுத்த பதிலடி

Trending News