வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் மகனை தூண்டி விட்ட ஷாலினி.. அரசியலில் தளபதிக்கு ஏற்படப்போகும் அவமானம்!

Shalini helped Vijay’s son Jason Sanjay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்,விஜய் இருவருக்கும் போட்டி இருக்கிறதோ, இல்லையோ படங்களின் ரிலீஸ் இன் போது இவர்களின் ரசிகர்களுக்கு இடையே பொறாமை மேலோங்கி இருக்கும். அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு நண்பன்டா! என்று ரசிகர்களை அமைதி படுத்தவும் செய்து இருக்கின்றனர். 

இவர்கள் க்ளோஸோ? இல்லையோ? இவர்களது மனைவிகள் ஷாலினி மற்றும் சங்கீதா இருவரும் ரொம்ப நெருக்கமான தோழிகளாம்.  இதனால் இவர்கள் இருவரும் கலந்துரையாடி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் வாழ்க்கையில் எடுத்திருக்கும் நடவடிக்கையால் தளபதி கடுப்பாகி உள்ளார். 

தளபதி சமீப காலமாக திரைப்படங்களை சற்று ஓரம் கட்டி விட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறிக் கொண்டிருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியை அறிமுகப்படுத்தியதில் இருந்து  கட்சியின் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Also read : இந்திய அளவில் முதல் இடத்தில ட்ரெண்டிங் ஆன Me Vijay ! ட்விட்டரை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் – ஏன் தெரியுமா ?

அதே போல் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பல்வேறு வகையான விமர்சனங்களும், இவரின் நற்பெயரை எப்படி டேமேஜ் பண்ணலாம் என்பது போன்ற சூழ்ச்சிகளும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் படம் இயக்கப் போவதாக அறிவித்து உள்ளார். 

இதற்காக முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்சன்ஸ் ஜேசன் சஞ்சயிடம் ஒப்பந்தம் போட்டு இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது. இதற்கு ஆரம்பப் புள்ளி எங்கே என்று பார்த்தால் அஜித்தின் மனைவி ஷாலினியாக இருக்கிறார். ஏற்கனவே குறும்படம் இயக்கி இயக்குனராகும் எண்ணம் கொண்ட  தன் மகனை பற்றி ஷாலினிடம் தெரிவித்துள்ளாராம் சங்கீதா. 

இதனால் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவதற்கு ஷாலினி உதவியதாக தெரிகிறது. படத்தின் அறிவிப்பின் போது விஜய் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் இருவருமே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தெரியாமலே இந்த நிகழ்வுகள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டன. அரசியல் களத்தில் கால் பதிக்கும் போது சொந்த வாழ்க்கையை இழுத்து பந்தாடி விடுவது எதிர்க்கட்சிகளின் வேலையாக இருந்து வருகிறது. அப்படி அமையும் பட்சத்தில் மகனுக்கு சப்போர்ட் பண்ண வில்லை, மகனைப் பற்றிய விவரங்கள் கூட சரியா தெரியாத ஒரு தந்தைக்கு நாட்டு மக்களை பற்றி என்ன தெரியும், எப்படி காப்பார்? என்று அப்படி போடு! அப்படி போடு! என்று போடுவார்கள் எதிர்க்கட்சிக்காரர்கள். இது விஜய்யின் அரசியலுக்கு பெரும் பின்னடைவாக அமையும். 

Also read: ஜேசன் சஞ்சய்க்கு லைக்காவை விட தூண் போல் இருக்கும் உறவு.. விஜய், SAC-ஐ தாண்டி அரண் போல் காக்கும் மனிதர்

Trending News