வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கன்னத்தோடு கன்னம் வைத்த அஜித், ஷாலினி.. திருமண நாளில் வெளியான ரொமான்டிக் போட்டோ

சினிமாவில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகளை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் மிகவும் தனித்துவமான ஜோடி என்றால் அஜித், ஷாலினி தான். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 23 வருட திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக அஜித், ஷாலினி ரொமான்டிக் போட்டோஸ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் நேற்று 23 வது திருமண நாளை கொண்டாடிய அஜித், ஷாலினி இருவரும் கேக் வெட்டிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் இவர்கள் இருவரும் கன்னத்தோடு கண்ணம் வைத்து ரொமான்டிக் புகைப்படத்தை எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை அஜித், ஷாலினி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Also Read : அஜித் சாதனையை பிடிக்க திணறும் சல்மான் கான்.. கிசி கா பாய் கிசி கி ஜான் மூன்று நாள் வசூல்

நேற்று முழுவதுமே ட்விட்டரில் ஷாலினி அஜித் ஹேஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வந்தனர். அந்த வகையில் நேற்று இரவு அஜித் ஷாலினி புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. மேலும் இன்னும் நூறு வருடங்களுக்கு மேல் இவர்கள் இப்படியே வாழ வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

ஒரு பக்கம் இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏகே 62 அப்டேட் எப்போது வரும் என ஆர்வமாக காத்திருக்கிறார்கள். சில மாதங்களாகவே இந்த அறிவிப்புக்காக காத்திருந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆரம்பத்தில் ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் அது மகிழ்திருமேனி கைக்கு சென்றது.

Also Read : விஜய்க்கு கொடுக்க முடியாது நான் தான் நடிப்பேன்.. பிடிவாதமாக இருந்த அஜித், வருத்தப்பட்ட இயக்குனர்.!

ஆனால் இப்போது ஏகே 62 படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி ஏகே 62 படத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது. இந்த நாளுக்காக அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ajith-shalini-cinemapettai

Also Read : துடித்து போன அஜித், வியந்து பார்த்த ஷாலினி.. 23 வருட திருமண வாழ்க்கையின் ரகசியம்

Trending News